ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
NK
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2925590 AswnBot (talk) உடையது. (மின்)
வரிசை 18:
}}
 
'''அ. இர. ரகுமான்''' (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: [[ஜனவரி 6]], [[1966]]), புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [[மணிரத்தினம்]] இயக்கத்தில் வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். [[இந்தி]], [[தமிழ்]], [[ஆங்கிலம்]] போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ''இசைப்புயல்'' என அழைக்கப்படுகிறார். [[ஆஸ்கார் விருது]], [[கோல்டன் குளோப் விருது]] , [[பாஃப்டா விருது]] , [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருது]] போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். [[ஹாலிவுட்]] திரைப்படமான [[ஸ்லம் டாக் மில்லியனியர்]] என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக [[ஆஸ்கார் விருது]]களை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் '''[[பத்ம பூசண்]]''' விருது அளிக்கப்பட்டது. இவர் [[ஆசியா]]வின் [[மொசார்ட்]] என்றும் அழைக்கப்படுகிறார்<ref>மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16</ref>.
<br />
 
<br />.
[2009] ஆம் ஆண்டு 81ஆம் [[ஆஸ்கார் விருது]]களுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.<ref>http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp</ref> 2017 ஆம் ஆண்டு இவருக்கு ''தமிழ் ரத்னா விருது'' வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.<ref>https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யில் பிறந்தவர். '''அருணாச்சலம் சேகர் திலீப் குமார்''' என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் [[இசை]] சார்ந்தது. இவரின் தந்தை சேகர் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் [[பியானோ]], [[ஆர்மோனியம்]] மற்றும் [[கித்தார்]] வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் [[இளையராஜா]] இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் [[எம். எஸ். விஸ்வநாதன்]], ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் [[குன்னக்குடி வைத்தியநாதன்]] உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
 
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான [[மணிரத்தினம்|மணிரத்தினத்தின்]] [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் [[மின்சார கனவு|மின்சாரக் கனவு]]ம், [[2002]] லகான் இந்தி படமும், 2003-இல் [[கன்னத்தில் முத்தமிட்டால்]] படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.
 
[[முத்து (திரைப்படம்)|முத்து]] திரைப்படம் [[சப்பான்|சப்பானில்]] வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ [[ஆசியா|ஆசியாவிலேயே]] நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
 
==இசையில் ஆரம்ப காலம்==
ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது