கீழ்வெண்மணிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன.<ref name="வெண்மணி தியாகிகள்">{{cite news | title=வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்! | work=[[தீக்கதிர்]] | date=25 டிசம்பர் 2013 | accessdate=25 திசம்பர் 2013 | author=ஜி.ராமகிருஷ்ணன் | pages=4}}</ref> கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும், [[பி. சீனிவாசராவ்]]வும் சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். இதனை ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.<ref name="வெண்மணி தியாகிகள்" />
 
[[1968]] [[டிசம்பர் 25]] [[கிறித்துமசு]] நாளன்றுஅன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகளும் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் ''ராமையன்'' என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில், அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.<ref>{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=வெண்மணியில் வெந்து மடிந்த நம் கண்மணிகள் | work=[[தீக்கதிர்]] | date=9 மார்ச் 2014 | accessdate=11 மார்ச் 2014 | pages=4}}</ref>
 
== பலியானவர்களின் பெயர் மற்றும் வயது விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வெண்மணிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது