ஆலடிவிளை கிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
ஆலடிவிளை சிற்றுாரில் வசிக்கும் தமிழர்கள், [[சிறுதெய்வ வழிபாடு]] என்ற [[நாட்டுப்புறவியல்]] முறையை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். [[கன்னி]] தெய்வத்தை முதன்மையாகவும், ரகசியமாகவும் வழிபடுகின்றனர். குடும்ப வாழ்வில் இணைவதற்கு முன், மரணமடையும் ஆண், பெண்களை கன்னி என்று அழைக்கின்றனர். அவர்களை நினைத்து, நள்ளிரவில் சிறு சடங்கு செய்து வழிபடுவர். இது, பெரும்பாலான குடும்பங்களில் நிகழும். பாரம்பரிய வழிபாட்டில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய குடும்பங்களிலும் பின்பற்றுவதுண்டு.
 
[[குலவழிபாடு]] மரபும் கொண்டுள்ளனர். இதை குடி வழிபாடு என்பர். இதில் ஒன்றைவீரன் குடி வழிபாடும் ஒன்று. [[ஒன்றைவீரன்]] வழித்தோன்றல் குடும்பத்தின் முதற் கோவில், ஊரின் நடுவே [[வெண்கலமகராஜன்வெண்கலராஜன்]] சாலையில், நாராயணன் ராஜமணி வளாகத்தில் உள்ளது.
 
இந்த குடி தவிர [[ஊசிகாட்டான்]], [[மன்னர் ராசா]], [[காலன்]] என [[குடித்தலைவர்களை]] முதன்மையாகக் கொண்டு, அந்தந்த பெயரில் மையங்களை உருவாக்கி வழிபடும் வழக்கம் உள்ளது. குடித்தலைவர் பெயரை, குடும்பத்தில் மூத்த உறுப்பினருக்கு சூட்டும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது. இப்போது அருகி வருகிறது. குடியை, கொடி என வாய்மொழியாக உச்சரிப்பதால் பொருள் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆலடிவிளை_கிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது