திருமூலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
}}
 
'''திருமூலர்''' அல்லது '''திருமூல நாயனார்''' [[சேக்கிழார்]] சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 [[நாயன்மார்]]களுள் ஒருவரும், [[பதினெண் சித்தர்கள் பட்டியல்|பதினெண் சித்தர்களுள்]] ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர்<ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. திருமூலர் வரலாற்றை [[நம்பியாண்டார் நம்பி]]கள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தயது எனினும் இவரால் அருளப்பட்ட [[திருமந்திரம்|திருமந்திரமாலை பல காலத்திற்கு பின்னரே உலகிற்கு வழங்கப்பட்டது என்பதால் தற்கால அறிஞர்கள் கி.பி என்று கூறுகின்றனர்]] (1). இது 3000 பாடல்களைக் கொண்டது<ref>மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ், ஞாலம் அறியவே நந்தி (திருமூலர்)</ref>. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
 
==திருமூல சித்தர்==
திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல. '''திருமூல சித்தர்'''.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=212}}</ref> வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலி[[விருத்தம்]] என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.
"https://ta.wikipedia.org/wiki/திருமூலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது