விஜய் சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
}}
 
'''விஜய் சேதுபதி''' (16 சனவரி 1978) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுதமிழ்நாட்டை]] சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]] (2010), [[பீட்சா (திரைப்படம்)|பீட்சா]] (2012), [[நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்]] (2012), [[நானும் ரௌடி தான் (திரைப்படம்)|நானும் ரௌடி தான்]] (2015), [[சேதுபதி (2016 திரைப்படம்)]] (2016), [[96 (திரைப்படம்)|96]] (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] மற்றும் மூன்று [[விஜய் விருதுகள்]] உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
 
===ஆரம்ப கால வாழ்க்கை===
==வாழ்க்கைக் குறிப்பு ==
===ஆரம்ப கால வாழ்க்கை===
விருதுநகர் மாவட்டம், [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராஜபாளையத்தில்]] பிறந்த இவர் தன் படிப்பை [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலும்]], [[சென்னை]]யிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.
 
===திரை வாழ்க்கை===
இவர் [[கூத்துப்பட்டறை]]யில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் '''பெண்''' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் [[கார்த்திக் சுப்புராஜ்|கார்த்திக் சுப்புராஜுடன்]] இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது