"காஞ்சி மணிமொழியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

602 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
1917ல் சர். பி. தியாகராயருக்கு காஞ்சி நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பால் கவரப்பட்டு, தியாகராயரின் கொள்கைகளை நன்கு அறிந்து, அதுமுதல் அக்கொள்கைகளை பரப்பும் பெரும்பணியில் மும்முரமாக ஈடுபட்டார். தன்னுடைய 17ம் வயதில் (1917ல் ) சர். பி. தியாகராயர் வாசக சாலை ஒன்றையும், பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றையும் தொடங்கி, 1930 வரை செயலாளராக இருந்து நடத்திவந்தார். <ref> காஞ்சி மணிமொழியார் 60வது ஆண்டு பிறந்தநாள், மணிவிழா மலர் </ref>. முதலில் நீதி கட்சிக்கும், பின்னர் தந்தை பெரியார் தலைமையிலான திராவிட கட்சிக்கு தொண்டு செய்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த அதன் தலைவர்களில் ஒருவராகிய மணிமொழியார், அந்தக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய இறுதி வரை அதன் செல்வாக்கும் புகழும் தமிழ்நாடெங்கும் பரவுவதற்காக ஓயாமல் உழைத்துவந்தார். கழகம் தொடங்கப்பட்ட 1949முதல் மூன்று ஆண்டுகள் அதன் தலைமை கழகத்தின் நிதிக்குழு செயலாளராக இருந்து கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணாவுக்கு பேருதவியாக இருந்தார்.1952ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் அதன் கொள்கைகளோடு இசைவாக இருந்த சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்து பண்ணியாற்றியது. மணிமொழியார் சென்னை, மற்றும் சுற்றுப்புறங்களில் நின்ற அத்தகைய வேட்பாளர்களுக்கு அயராது பணிபுரிந்தார். 1957ல் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அறிஞர் அண்ணா போட்டியிட்டபோது மணிமொழியார் அவர்கள் பல நாட்கள் காஞ்சிபுரத்திலே தங்கி இருந்து வீடு வீடாக சென்று அண்ணா அவர்களுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். 1962ல் நடைபெற்ற பொது தேர்தலில் தமிழகச் சட்டமன்றத் தொகுதிகள் அத்தனையிலும் மிகப் பெரியதாக விளங்கிய இந்தத் தொகுதியிலிருந்து கஞ்சி மணிமொழியார் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராகப் போட்டியியிட்டு ஏறத்தாழ 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மணிமொழியார் சட்டமன்ற கூட்டங்கள் ஓவ்வொன்றிருக்கும் தவறாமல் சென்று அங்கு நடைபெற்ற விவாதங்களில் முழு பங்கு ஏற்றார். அரசு ஆரம்ப ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியதன்
அவசியத்தையும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை வதைத்து வரும் தொல்லைகளையும் துயரங்களை அகற்ற வேண்டியதன் அவசியம் , சென்னை நகரத்தின் குடிநீர் பஞ்சத்தை நீக்குவதற்றகான ஏற்ப்பாடுகளை மாநில அரசு முழு கவனம் செலுத்தியாக வேண்டும் மற்றும் குடுசை வாழ் மக்கள் வாழ்வுக்கான ஆலோசனை'முதலிய கருத்துக்கள் அவருடைய சட்டமன்ற சொற்றப்பொழிவுகளில் சேர்ப்பிடம் பெற்றன.<ref> காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர் </ref>. தியாகராய நகர் தொகுதிவாழ் மக்களுக்காக ஓயாமல் பாடுபட்டு அனய்வரின் பாரட்டையம் முழு அளவில் பெற்றிருந்தார். 1967 பொதுத் தேர்தலின் போது, கலைஞர் கருணாநிதிக்காக அந்தத் தொகுதியை முழு மனதுடன் விட்டுக்கொடுத்த தியாக உணர்வு படைத்தவர்.
 
==சீர்திருத்தவாதி==
235

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3044899" இருந்து மீள்விக்கப்பட்டது