திருக்கேதீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
===வரலாற்றுச் சுருக்கம்===
:இலங்கையை சிவபூமி என்று அறைகின்றார் திருமூல நாயனார். சிறப்புமிகு இச் சிவபூமியின் கண் பழமையும் பெருமையும் புகழும் உடைய சிவத்தலங்கள் பலவிருந்தமை வரலாறு. இவ்வரலாற்றுண்மையினை கி.மு.1800 வரையில் நடந்த இராம இராவண யுத்தத்தின் தரவுகளிலறியலாம்.
 
:இப்பெருமையுடைய ஈழத்திருநாட்டில் மூர்த்தி தலம் தீர்த்தமாய மூன்றுஞ் சிறப்பாமையப் பெற்ற திருத்தலம் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலாமாம்.
 
:பெருந்தவமுடையோராயா கேது, மயன், மாதுவட்டா, மண்டோதரி, இராமர், அகத்தியர் போன்ற தவமுடையோர் வழிபாடாற்றி தங்குறை தீர்த்து மீண்ட வரலாறு கொண்ட தலம் இத்திருத்தலம்.
 
:கேது பூசித்த தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறா நிற்பர். இக்கோயில் மாதோட்ட நன்னகரில் அமைந்துள்ளது. சூரபதுமன் தன் மனையாளனின் பேரனார் பெயர் துவட்டா எனக் கூறப்படுகின்றது. துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்தில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தமை உணரப் பாலது.
 
:இத் தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்குக் காயாவில் கடனாற்றும் புண்ணியம் கிட்டுமெனவும், இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இத்தீர்த்ததின் மகிமையும் சிறப்புமாகும்.
 
:இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது போதரும் இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமிதுவாகும்.
 
:ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவத்தின் ஓளிவிளக்காம் தவக்கொழுந்தினராய அருளடியார்கள் என உலகினரால் போற்றப்படும் [[திருஞான சம்பந்த மூர்த்தி நாயானார்|திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும்]], [[சுந்தர மூர்த்தி நாயனார்|சுந்தர மூர்த்தி நாயனாராலும்]] போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும்
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்கேதீச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது