லோக் ஜனசக்தி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
No edit summary
வரிசை 33:
 
'''லோக் ஜனசக்தி கட்சி''' ('''LJP''') [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். மறைந்த [[இராம் விலாசு பாசுவான்]] அவர்களின் மகன் [[சிரக் பஸ்வான்|சிரக் பாசுவான்]] இந்த கட்சியின் தலைவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி [[ஐக்கிய ஜனதா தளம்]] கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. பீகாரில் உள்ள [[தலித்]] மக்களின் வாழ்க்கைத் தரம் உயர், பிரதிநிதித்துவம் பெற இக் கட்சி செயல்படுகிறது. தற்போது லோக் ஜனசக்தி கட்சி [[தேசிய ஜனநாயக கூட்டணி]]யின் ஓர் அங்கமாக உள்ளது. இராம் விலாசு பாசுவான் இக்கட்சியை உருவாக்கினார்.
 
==வரலாறு==
 
ஐக்கிய சனதா தளத்திலிருந்து பிரிந்து 2000 ஆம் ஆண்டு இராம் விலாசு பாசுவான் இக்கட்சியை உருவாக்கினார். இக்கட்சி உருவாக்கத்திற்கு அவரது தம்பி செய் நாராயண் பிரசாத் நிசாத்தும் ரமேசு சிகாசினாகியும் துணையிருந்தார்கள்.<ref>[http://www.thehindu.com/thehindu/2000/11/28/stories/02280003.htm Yadav stalled rapproachement, says Paswan]</ref><ref>[http://www.thehindu.com/thehindu/2000/11/29/stories/01290007.htm Paswan launches party]</ref><ref>[http://www.thehindu.com/thehindu/2000/11/27/stories/0127000d.htm Janata Dal(U) splits]</ref>
 
காங்கிரசும் இராச்டிரிய ஜனதா தளமும் உள்ள கூட்டணியில் போட்டியிட்டு நான்கு மக்களவைத் தொகுதிகளில் வென்றது. இராம் விலாசு பாசுவான் ஒன்றிய வேதிப்பொருட்கள் உர அமைச்சராக தொடர்ந்ததுடன் உருக்கு அமைச்சராகவும் பதவி வகித்தார்.
 
2005 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரசும் இராச்டிரிய ஜனதா தளமும் உள்ள கூட்டணியில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்.<ref name=Judgment-rameshwarprasad />
 
அத்தேர்தலில் எக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, இக்கட்சி எந்த கூட்டணியும் ஆட்சியமைக்க ஆதரவு தர மறுத்து விட்டது. அதனால் இக்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய சனதாதளத்திற்கு கட்சி மாறி தேசிய சனநாயக கூட்டணி ஆட்சியமைக்க உதவப் போவதாக வதந்தி உலவியது. இந்த பல்வேறு குழப்பங்களால் பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. சில மாதங்கள் கழித்து சட்டமன்றம் கலைக்கப்பட்டு 2005 அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேசிய சனநாயக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நிதிசு குமார் தலைமையில் ஆட்சியமைத்தது. அக்டோபரில் நடந்த தேர்தலில் இக்கட்சி 10 தொகுதிகளிலேயே வெல்ல முடிந்தது. <ref name=Judgment-rameshwarprasad>{{cite web|title=Rameshwar Prasad & Ors Versus Union of India & Anr|url=http://indiankanoon.org/doc/511209/|publisher=Supreme Court of India|accessdate=24 January 2006}}</ref><ref name=Judgment-rameshwarprasad /><ref name=HINDU2005>{{cite news|title=Bihar comes under President's rule|url=http://www.hindu.com/2005/03/08/stories/2005030807560100.htm|accessdate=28 February 2014|newspaper=The Hindu|date=7 March 2005}}</ref><ref name=HINDU2005 /><ref>{{cite news|title=Governor recommends President's rule in Bihar|url=http://www.rediff.com/election/2005/mar/06bihar.htm|accessdate=28 February 2014|newspaper=Rediff|date=6 March 2005}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லோக்_ஜனசக்தி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது