"காவிரி ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது [[பிலிகுண்டுலு]] வழியாக [[ஒகேனக்கல் அருவி]]யை அடைகிறது. பின் காவிரியானது [[மேட்டூர் அணை]]யை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் [[பவானி]] என்னுமிடத்தில் [[பவானி ஆறு]] கலக்கிறது. [[ஈரோடு]] நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் [[கொடுமுடி]] அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் [[நொய்யல் ஆறு]] கலக்கிறது. அமராவதி ஆறானது [[கரூர்]] அருகேயுள்ள [[திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில்|திருமுக்கூடலூர்]] என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. [[கரூர்]],[[திருச்சி]] மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை [[அகண்ட காவிரி]] என்பர். [[முசிறி]], [[குளித்தலை]] நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி [[முக்கொம்பு]] என்னும் இடத்தில் [[மேலணை]]யை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.
வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை
தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. [[கொள்ளிடம்]] காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்,காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு ([[திருச்சிராப்பள்ளி]]) அருகே [[ஸ்ரீரங்கம்]] (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது [[கல்லணை]]யை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]], [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகப்பட்டிணம்]] மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை <ref>[http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7999782.ece|தொடர் மழையால் வேலையிழப்பு எதிரொலி : டெல்டா மாவட்டங்களில் இருந்து வேலைதேடி கேரளா செல்லும் தொழிலாளர்கள்] தி இந்து தமிழ் டிசம்பர் 17 2015</ref> சேர்ந்தவை.
[[படிமம்:Mouth of River Cauvery.JPG|900px|thumb|center|காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்]]
{{clear}}
194

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3056663" இருந்து மீள்விக்கப்பட்டது