இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

261 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
| Abode = [[அயோத்தி]]}}
 
'''இராமர்''' இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[விஷ்ணு|விஷ்ணுவின்]]வின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல [[அயோத்தி|அயோத்தியின்]]யின் அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[பரதன் (இராமாயணம்)|பரதன்]], [[சத்ருகனன்|சத்துருகனன்]] ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
 
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தின் முக்கிய மாந்தர் இராமர் ஆவார். இராமரைக் கடவுளாக [[இந்து சமயம்|பல கோடி இந்து]] சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு]]வின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.
=== மிதிலை நகர் செல்லுதலும் திருமணமும் ===
 
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை|மிதிலைக்குச்]]க்குச் செல்லும் வழியில் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாக கிடந்த [[அகலிகை]] மீது இராமரின் திருவடி பட்டதால், சாபம் நீங்கி மீண்டும் உண்மை உருவிற்கு வந்தாள்.
 
[[சனகன்]] என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் [[சீதை|சீதையைத்]]யைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான். மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
 
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. [[கைகேயி|கைகேயியின்]]யின் சிறப்பு பணிப்பெண் [[மந்தரை|கூனி]] (மந்தரை) ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறிந்த தசரதன் உயிர் துறந்தான்.
 
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
 
== காட்டில் சான்றேர்களின் தொடர்பு ==
இராமர் காட்டில் வாழும் காலத்தில் [[குகன்]], [[பாரத்துவாசர்]], [[அகத்தியர்]], [[சபரி (இராமாயணம்)|சபரி]] போன்ற சான்றேர்களின் தொடர்பு கிடைத்தது.
 
=== சூர்ப்பனையின் மூக்கினை அறுத்தல் ===
[[இலங்கை|இலங்கையை]]யை ஆண்டு வந்த [[இராவணன்]] தங்கை [[சூர்ப்பனகை]] ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி இராமனைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கினை அறுத்து எறிகிறான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகள் அனைத்தையும் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என்னை அங்க ஈனப்படுத்தி விட்டான்' என்று கூறி அழுகிறள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறுகிறான்.
 
=== மாயமான் ===
 
=== இராமருக்கும் சுக்ரீவனுக்குமான சந்திப்பு ===
[[சுக்ரீவன்]] குரங்குகளுக்கு அரசனாகிய [[வாலி|வாலியின்]]யின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர். இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
 
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் பாலம் கட்டின. அந்த பாலத்தின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
ராமருக்கான திருக்கோயில்கள் பல நாடுகளிலும் உள்ளன.
 
* ஏகாந்தராமஸ்வாமி கோவில்,தங்கச்சிமடம்[[இராமேஸ்வரம்]]
 
* ஏகாந்தராமஸ்வாமி கோவில்,தங்கச்சிமடம்[[இராமேஸ்வரம்]]
*[[கோதண்டராமர் கோயில்]], [[இராமேஸ்வரம்]]
*[[திருவெள்ளியங்குடி]]
அவதாரக்கடவுள் இராமரின் பெயரிலேயே தாய்லாந்தின் மன்னர்கள் (Rama (Kings of Thailand))பெயர்கள் அமைகின்றன.
 
== படக்காட்சியகம் ==
 
<gallery>
Fileபடிமம்:Srisita ram laxman hanuman manor.JPG|சீதை, அனுமனுடன் இராமர்
Fileபடிமம்:Rama in forest.jpg|சீதை, இலக்குவனுடன் இராமரின் வனவாசம்
Fileபடிமம்:Ramapanchayan, Raja Ravi Varma (Lithograph).jpg|இராமரின் குடும்பம்
Fileபடிமம்:Agni pariksha.jpg|சீதை தன் கற்பை நிரரூபிக்க தீக்குளித்தல்
Fileபடிமம்:Rameshvaram lingam.jpg|இராமர் ராமேஸ்வரத்தில் ராமநாதரை பிரஷ்டை செய்தல்
Fileபடிமம்:COLLECTIE TROPENMUSEUM Reliëf op de aan Shiva gewijde tempel op de Candi Lara Jonggrang oftewel het Prambanan tempelcomplex TMnr 10016191.jpg|ராவணன் சீதையை கடத்திச் செல்லுதல்
Fileபடிமம்:Rama-Varuna.jpg|இலங்கைக்கு பாலம் கட்ட வழிகோலாத வருணன் இராமரின் கோபத்திற்கு அஞ்சி மனைவியர்களுடன் சரண் அடைதல்
|ராமர் முன்னிலையில் வீடணனை இலங்கையின் அரசனாக இலக்குவன் அபிசேகம் செய்வித்தல்
படிமம்:Valmiki Ramayana.jpg|[[வால்மீகி]]
Fileபடிமம்:Valmiki with Lava and Kusha.jpg|[[லவன்|லவ]] [[குசன்|குசர்களுடன்]] வால்மீகி முனிவர்
</gallery>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[அயோத்தி பிரச்சினை]]
* [[இந்தியாவின் பண்பாடு]]
* [[இந்து மெய்யியல்]]
* [[காந்தர்வ வேதம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புக்கள் ==
61,354

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3058612" இருந்து மீள்விக்கப்பட்டது