தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=='''<nowiki>தேவகாந்தன்==</nowiki>''' ‘க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:02, 18 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

==தேவகாந்தன்==

‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில்  கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்தார். (1947) டிறிபேக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வதிகிறார்.

===பத்திரிகைப் பணி===

1968-1974 வரை ஈழநாடு தேசிய நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியர். கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியர்.

===எழுத்துத்துறை===

கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை, ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில்  இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

===வெளிவந்த நூல்கள்===

நாவல்கள்

உயிர்ப்பயணம், 1985

விதி 1993

நிலாச்சமுத்திரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 2004, பூபாலசிங்கம் பதிப்பகம்

திருப்படையாட்சி 1998

வினாக்காலம் 1998

அக்னிதிரவம் 2000

உதிர்வின் ஓசை 2001

ஒரு புதிய காலம் 2001

கனவுச்சிறை  (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம்

கலிங்கு, 2017, வடலி பதிப்பகம்

கதாகாலம் 2005

கந்தில்பாவை, 2016, காலச்சுவடு

நதிமேல் தனித்தலையும் சிறுபுள், 2019, நற்றிணை பதிப்பகம்

லங்காபுரம் 2007


சிறுகதைகள்

நெருப்பு, 1995,  பாரிநிலையம்

இன்னொரு பக்கம்

காலக்கனா

ஆதித்தாய், 2017, ஜீவநதி வெளியீடு


குறுநாவல்கள்

எழுதாத சரித்திரங்கள்

திசைகள், 1997, மித்ர வெளியீடு


கட்டுரைகள்

நுண்பொருள் : அறம் பொருள் காமம், 2019, அகம் வெளியீடு

நவீன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம், 2019, பூபாலசிங்கம் பதிப்பகம்

உரைவீச்சு

ஒரு விடுதலைப் போராளி

===திரைத்துறையில் பங்களிப்பு===

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.

In the Name of Buddha என்ற சினிமாவிலும் பங்களித்தார்.

===தொலைக்காட்சியில் பங்களிப்பு===

ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளனாக ஓராண்டுக்கும் சிறிது மேலாக வேலைபார்த்தேன்.

===பரிசுகள் விருதுகள்===

நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம் 1996

நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக லில்லி தேவசிகாமணி பரிசு 1996

தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998

தமிழர் தகவல் 2013

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகாந்தன்&oldid=3061682" இலிருந்து மீள்விக்கப்பட்டது