சாணியடி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சாணியடி விழா என்ற தலைப்பில் புதிய பதிவு தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:05, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

சாணியடி விழா தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஒன்றாகும்.

இடம்

இவ்விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகில் உள்ள கும்டாபுரத்தில் அமைந்துள்ள பீரேஸ்வரர் கோயிலில், விவசாயம் செழிப்பதற்காக, தீபாவளிப் பண்டிகையை அடுத்து வருகின்ற மூன்றாவது நாள் கொண்டாடப்படுகிறது. [1]

விழா நிகழ்வு

விழா நடைபெறுவதற்கு முன்பாக கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டின் சாணங்களும் சேகரிக்கப்பட்டுக் கோயிலின் பின்புறம் குவித்துவைக்கப்படுகிறது. பின்னர் ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். ஊரின் தெய்வமாகக் கருதப்படுகின்ற பீரேஸ்வரருக்கு சிறப்பு பூசைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோயிலுக்குள் சென்று சிறப்பு பூசைகள் செய்கின்றனர். கொட்டி வைக்கப்பட்டுள்ள சாணத்தை உருண்டையாக வடிவமைத்து, பங்கேற்ற பக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வீசி மகிழ்கின்றனர். பெண்களும், ஊர் மக்களும் இதனை ஆர்வமாகக் கண்டுகளித்தனர். [1] பூசை செய்வதற்கு முன்பாக குளத்தில் குளித்துவிட்டுச் செல்கின்றனர். [2]

உரம்

விழா நிறைவிற்குப் பின்னர் அங்கிருந்த சாணத்தை விவசாய நிலங்களில் உரமாக இடுகின்றனர். [1]

கொரோனா

வழக்கமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு (2020) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறைந்த அளவிலான பக்தர்களே கலந்துகொண்டுள்ளனர். சாணம் கிருமி நாசினி என்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவாது என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 விவசாயம் செழிக்க விநோத வழிபாடு, தினமணி, 17 நவம்பர் 2020
  2. தளவாடி அருகே சாணியடி திருவிழா, பக்தர்களின் பாரம்பரிய வழிபாடு, தினமலர், 18 நவம்பர் 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணியடி_விழா&oldid=3062066" இலிருந்து மீள்விக்கப்பட்டது