பிறரன்பின் பணியாளர்கள் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
 
== பிறரன்பு பணியாளராதல் ==
ஒரு முழு பிறரன்பு பணியாளராக ஒன்பதாண்டு காலம் பிடிக்கும். துவக்கத்தில் பணியாளர் வாழ்வில் ஆர்வமுள்ள எவரும் குறுகிய கால "பார்த்து செல்"லும் அனுபவத்தை மேற்கொள்ளலாம். பின்னும் அவ்விளம்பெண்கள் அமைப்பில் சேர விரும்பி, மதச்சபையால் சாத்தியமுள்ள வேட்பாளராகக் கருதப்பட்டால், விழைவு கட்டத்துள் நுழைவர். இந்நிலையில் அவர்களது கிறித்துவ வாழ்க்கை முறை ஆழப்படுத்தப்படுவதோடு, ஆங்கில மொழியல்லாத நாடுகளைச் சேர்ந்தோருக்கு ஆங்கிலப் பயிற்சியும் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மதச்சபை வேட்பாளராதல் என்ற நிலையில் புனித [[விவிலியம்|விவிலிய வர்ணனைகள்]], சமூகத்தின் நிர்ணய ஆவணங்கள், தேவாலய வரலாறு, மற்றும் [[இறையியல்]] முதலியவை குறித்த கல்வி அறிமுகப்படுத்தப்படும். தகுதியுடையோர் உண்மையான மத வாழ்வான துறவுபுகு நிலையை அடைவர். புதுத் துறவிகள் இடைக்கச்சையுடனான பருத்தி அங்கி, நீல பட்டைகளற்ற வெள்ளைப் புடவைகள் உடுத்துவர். ஒழுங்குமுறை என்றழைக்கப்படும் முதலாண்டில் இறை உறவையும் செபவாழ்வையும் மேம்படுத்துப்படுவதோடுமேம்படுத்தப்படுவதோடு அமைப்பு குறித்த அறிவும் போதிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் அருட்பணி வாழ்விற்குத் தேவையான செயல்முறைப் பயிற்சிக்கே பெரிதும் கவனமளிக்கப்படும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுதோறும் (ஐந்து ஆண்டுகளுக்கு) புதுப்பிக்கப்படும் ஓராண்டிற்கான தற்காலிக சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்வர். அப்போது மதச்சபையின் நீலப் பட்டை சரிகை பொருந்திய வெண்புடவையும், கிறித்துமீதான தம் இல்லற அன்பின் அடையாளமாக ஒரு உலோகச் சிலுவையும் வழங்கப்படும். ஆறாம் ஆண்டில் அவர்கள், துறவு முழுமை பெறல் பொருட்டு, ஓராண்டு ஆழ்ந்த ஆன்மிக மேம்பட்டிற்காக [[உரோம்|உரோமிற்கோ]], கொல்கத்தாவிற்கோ அல்லது வாஷிங்க்டன் டி.சி-க்கோ பயணப்படுவர்; இவ்வாண்டு இறுதியில் தம் இறுதிப் பணியை மேற்கொள்வர்.
 
=== பொருளுடைமகள் ===
4,571

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3073504" இருந்து மீள்விக்கப்பட்டது