டி. எஸ். சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 11:
'காந்தி' என்ற வாரம் இருமுறை இதழை தொடங்கினார்.
 
பின்னர், சதானந்த் தொடங்கிய [[தினமணி]] இதழின் முதல் ஆசிரியராகப் பொறுபேற்றார். 'இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால் தன்னை இந்தியன் என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் - தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தன் வசிப்பிடமாகக் கொண்ட, [[இந்து]], [[முஸ்லிம்|முஸ்லீம்,]] [[கிறிஸ்தவர்|கிறித்தவர்கள்]] மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்' என்று தினமணியின் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது, [[ஏ.என்.சிவராமன்]], [[புதுமைப்பித்தன்]], [[சி.சு.செல்லப்பா]], [[கு.அழகிரிசாமி]] உள்ளிட்டோர் துணை ஆசிரியர்களாக இருந்தனர். தினமணி பின்னர், கோயங்கா குழுமத்துக்கு கைமாறியது. [[1943]] இல், தினமணியில்[[தினமணி]]யில் இருந்து வெளியேறினார் சொக்கலிங்கம். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி ஆகியோரும் அப்போது வெளியேறினர். சொக்கலிங்கத்துக்கு பின்னர் தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு அவரின் நெருங்கிய நண்பரான ஏ.என்.சிவராமன் வந்தார். தினமணியில் இருந்து வெளியேறிய சொக்கலிங்கம், இக்கட்டான ஒரு நேரத்தில் மீண்டும் தினமணியில் ஒரு பணிக்கு வர நேர்ந்தது. அதற்கு காரணமாக இருந்ததும் ஏ.என்.சிவராமனே. அந்தச் சூழலில் தினமணி நிர்வாகம் சொக்கலிங்கத்துக்கு நிர்வாகத்தில் ஒரு பணியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
 
[[1944]] இல் தினசரி என்ற நாளிதழைத் தொடங்கினார். சிறிது காலத்துக்கு மேல் அந்த இதழ் தாக்குப்பிடிக்காமல் திணறியது. ஒரு கட்டத்துக்கு மேல் நின்று போனது. ஆனாலும் மனம் தளராத சொக்கலிங்கம், [[ஜனயுகம்]], [[பாரதம்]], [[நவசக்தி]] உள்பட பல [[பத்திரிகை|பத்திரிகைகளை]] நடத்தினார்.
 
== புரவலர் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._சொக்கலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது