கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
50 வருடத்திற்குப் பின் தீர்த்தவாரி செய்தி இணைப்பு
No edit summary
வரிசை 3:
 
==தல வரலாறு==
வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப்பெருமாள் என்ற பெயர் பெற்றார். வைகுண்டத்தில் திருமாலை தருசிக்க தேவர்கள் வந்தபோது ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் திருமாலை தரிசிக்க அனுமதிக்கவில்லை. வாயிலில் அமர்ந்து தியானித்து திருமாலை வேண்டினர். திருமாலும் காட்சி தந்து அருளினார். தங்களுக்கு தடையாக இருந்த துவாரபாலகர்களுக்கு பூமியில் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். அதிர்ந்து போன துவாரபாலகர்கள் திருமாலை வேண்டவேண்டி சாபம் கொடுத்தது கொடுத்ததுதான். பூலோகம் செல்லுங்கள், தக்க தருணத்தில் தாமே சாப விமோசனம் அளிப்பதாக கூறி அனுப்பினார். [[ஹிரண்யட்சன்]], [[ஹிரண்யாகசிபு]] என்ற பெயருடன் பூலோகம் சென்ற அரக்கர்கள், கடும் தவம் செய்து பூமியை பாதாளாத்துக்கு கொண்டு சென்றார்கள். இக்கொடிய செயலைக் கண்ட வானவர்கள் பூமியின் இயக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக வைகுண்டத்தில் திருமாலை வணங்கி நிகழ்ந்ததைக் கூறிக் காப்பாற்றும்படி வேண்டினர். அசுரனால் கவரப்பெற்ற பூமியை வெளிக்கொணர வராக (பன்றி) உருவெடுத்து பாதாளம் புகுந்து அவ்வசுரனுடன் போர் புரிந்தார். ஒரு கொம்பினால் அவனை அழித்துச் சுற்றத்தாரையும் அழித்தார். மற்றொரு கொம்பினால் பூமியைத் தாங்கிக்கொண்டு மேலே வந்து பூமியை முன்போல் நிலைபெறச் செய்தார். பூமியைத் தோண்டி வெளிக்கொணர்ந்து நிலை பெறச்செய்ததைப் புலப்படுத்த பூமிதேவி தமது இடது மடியிலேயே வீற்றிருக்கும் நிலையில் மாசி மாதம் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திரம் கூடிய மகாமகத்தன்று புண்ணிய தீர்த்தமான வராக குளக்கரையின் மேலே எழுந்தருளினார். இக்கோயிலின் முக்கிய திருவிழா 12 கருடசேவையாகும். <ref> மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.</ref> இந்த இடமே வராகபெருமாள் ஆலயம். இது பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் வராக பெருமாள், [[கருடாழ்வார்]], விஷ்வக்சேனர், [[நிகமாந்த மகாதேசிகர்]] ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
 
==மூலவர், தாயார்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வராகப்பெருமாள்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது