சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு, அடி ஆத்தி, அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் சில.
 
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, [[பி. லீலா]]விற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். [[ஹரிஹரன்]], [[உன்னிகிருஷ்ணன்]], எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி [[வாலி (திரைப்படம்)|வாலி]], [[வைரமுத்து]], [[பழனி பாரதி]], [[பா. விஜய்]] போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.
 
தெலுங்கில் சித்ராவை 'பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் 'பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ். பி. பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி (மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது