அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 16:
 
== வாழிடம் ==
அட்டை குளம் குட்டை ஆறு முதலிய [[நன்னீர்]] நிலைகளிலும், [[கடல்|கடலிலும்]], ஈரத்தரை மீதும் வாழும் ஒருவகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் [[மண்புழு]], [[பூச்சி]]களின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு துப்புவாளர்போலதுப்புரவாளர்கள் போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி [[ஒட்டுண்ணி]]களாக வாழ்கின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும் இயல்புடையன ஆகும்.
 
== உடலமைப்பு ==
வரிசை 31:
அட்டைகளால் மிகுந்த ஆபத்து விளைவதுண்டு. நீரில் இறங்கும் கால்நடைகளின் மூக்கு தொண்டை முதலிய வீடங்களில் புகுந்து கொள்ளும். குளிக்கும்போதும், நீர்குடிக்கும்போதும் மனிதனுடம்பிலும் அவ்வாறு புகுந்துவிடும். [[மூச்சுக்குழாய் (முதுகுநாணி)|மூச்சுக் குழாய்]]களிலும், மூக்கின் உள்ளேயிருக்கும் சந்துகளிலும், கன்ன எலும்பின் புழைகளிலும் இருந்துகொண்டு பெருந்துன்பமும் இரத்தப் பெருக்கும் விளைவித்துவரும். முடிவில் சாவும் நேர்வதுண்டு. மழை மிகுதியாகப் பெய்யும் [[காடு]]களில் நிலத்தின்மேல் கணக்கற்ற எண்ணிக்கையில் சில அட்டைகள் உண்டு. அவை அங்குச் சஞ்சரிக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் மிக்க இடர் செய்யும்.
 
== அட்டைப் பூச்சி மருத்துவம் ==
2800 ஆண்டுகளுக்கு முன்பே, [[எகிப்து]] நாட்டில் அட்டைப் பூச்சியை மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.<ref>[http://abcnews.go.com/Health/PainManagement/story?id=4379952&page=1 Some Docs Latching Onto Leeches ]</ref> அட்டைப் பூச்சி மருத்துவச் சிகிச்சைக்கு '''ஹிருடோதெரபி''' என்பர். இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சையில் அட்டைப் பூச்சிகளை பயன்படுத்துகின்றனர்.<ref>[http://www.newindianexpress.com/lifestyle/health/Leech-Therapy-Draws-the-First-Blood/2014/05/18/article2226671.ece Leech Therapy Draws the First Blood]</ref><ref>[http://healthandayurveda.blogspot.in/2007/05/application-and-importance-of-leech.html APPLICATION AND IMPORTANCE OF LEECH THERAPY]</ref>
 
உடலில் உள்ள இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கும், முகப்பருக்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. தோல் வியாதிகள் ( Psoriasis),, வெளி மூலம், மூட்டு வலி குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன<ref>http://www.leechestherapy.com/about-leeches/benefits</ref>
 
=== மருந்துக்களாக ===
அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளதால், அட்டைகளைப் புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.
 
வரிசை 43:
அட்டையைச் சமீபகாலம் வரையில் சில நோய்களில் இரத்தம் உறிஞ்சுவதற்காக மருத்துவர் உபயோகித்து வந்தனர். இக்காலத்திலும் சில சமயங்களில் அவ்வாறு செய்கின்றனர். இதற்காக அட்டைகளைச் சேகரித்து நீர்த்தொட்டிகளிலிட்டு வைத்திருப்பார்கள். அட்டையிலிருந்து எடுக்கும் ஹிருடின் என்னும் பொருளை ரணசிகிச்சையில் இரத்தம் கட்டிப் போகாதபடி ஊசி போடுவதுண்டு.
 
== காட்சியகம் ==
<gallery>
File:Leech Removal.JPG|
வரிசை 52:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|இளையர் அறிவியல் களஞ்சியம்/அட்டை}}
*[https://www.youtube.com/watch?v=WnRu3lEqZTs 10 Diseases That Can Be Cured with Leech Treatment காணொலிக் காட்சி]
"https://ta.wikipedia.org/wiki/அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது