பூரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
("lip")
OED என்னிடம் இல்லை, நான் செய்துள்ளது போல் மற்றதுக்கும் செய்யலாம்
வரிசை 15:
'''பூரான்''' (''Centipede'') பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து நகரும், [[கணுக்காலி]]கள் என்னும் தொகுதியில் [[பலகாலி]]கள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள ஓர் உயிரின வகுப்பு. இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம்<ref> Encarta கலைக்களஞ்சியம் 12 முதல் 100 கட்டுகள் உள்ளன என்று கூறுகின்றது. The Columbia Encyclopedia, Sixth Edition. (2001-07)கலைக்களஞ்சியத்தில் "centipede" என்னும் கட்டுரையில், பொதுவாக 35 கட்டுகள் இருக்கும் என்று குறிப்பிடுகின்றது.</ref> உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்கம் உருப்புடையது. எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. தலையில் இருந்து மிக நீளமான [[உணர்விழை]]கள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). ஒவ்வொரு கால்களும்கூட பகுதி-பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். பொதுவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். பெரும்பாலான பூரான் இனங்களில் அவற்றின் கால்களின் நுனியில் கூரான உகிர்கள் இருக்கும்.
 
பூரான்களின் அறிவியல் பெயர் ''கைலோப்போடா'' (Chilopoda, Χειλόποδα). [[கிரேக்க மொழி]]யில் ''கைலோஸ்'' (Χειλός) என்றால் உதடு ("lip") என்றும், ''போடோஸ்'' (ποδός) என்றால் கால் என்றும் பொருள்.<ref name="OED">ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, 2 ஆவது பதிப்பு, 1989; Oxford English Dictionary, 2nd Edition, 1989, "Chilopod"</ref><ref name="ydict">{{cite web|url=http://education.yahoo.com/reference/dictionary/entry/chilopod|title=chilopod|work=Yahoo! Education: Dictionary|publisher=Houghton Mifflin|accessdate=2008-12-16|quote=chi·lo·pod...ETYMOLOGY: From New Latin Chlopoda, class name : Greek kheilos, lip (உதடு) + -poda, -pod (so called because the foremost pair of legs are jawlike appendages) }}</ref> பூரானின் உடல் அமைப்பில், அதன் முன்கட்டின்(முன் பகுப்பு உடலின்) கால்கள், இரையைப் பற்றி நஞ்சு ஊட்டுவதால், வாயின் தாடை போல் இயங்குகின்றது. எனவே, இதனை ''தாடைக்காலிகள்'' என்னும் பொருளில், "foot-jaw",<ref name="OED"/> ''கைலோப்போடா'' என்று அழைக்கிறார்கள். தமிழில் இதனைத் '''தாடைக்காலிகள்''' எனக்கூறலாம்.
இப்படி ஓர் உயிரின வகுப்பு முழுவதும் இரையைத் தாக்கி உண்ணும் வகையாக இருப்பது அரிது.
 
"https://ta.wikipedia.org/wiki/பூரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது