ரபியுதீன் அகமது (பல் மருத்துவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரபியுதீன் அகமது (பல் மருத்துவர்)''' Rafiuddin Ahmed (24 டிசம்பர் 1890 – 9 பிப்ரவரி 1965) ஒரு இந்திய பல் மருத்துவர், கல்வியாளர் மற்றும் மேற்கு வங்க அமைச்சரவைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:17, 19 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

ரபியுதீன் அகமது (பல் மருத்துவர்) Rafiuddin Ahmed (24 டிசம்பர் 1890 – 9 பிப்ரவரி 1965) ஒரு இந்திய பல் மருத்துவர், கல்வியாளர் மற்றும் மேற்கு வங்க அமைச்சரவையில் அங்கம் வகித்தவர், அவர் இந்தியாவின் முதல் பல் மருத்துவ கல்லூரியான, டாக்டர் ஆர். அகமது பல் கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவியவர், பின்னர் 'கல்கத்தா பல் மருத்துவக் கல்லூரி' என்று அக்கல்லூரி பெயர் மாற்றம்செய்யப்பட்டது. அங்கு அவர் 1950 வரை அதன் முதல்வராக இருந்தார்.

ரபியுதீன் அகமது 1925 ஆம் ஆண்டில் இந்திய பல் மருத்துவ பத்திரிகையை நிறுவினார், மேலும் 1939 இல் வங்க பல் மருத்துவ சட்டத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். 1946 ஆம் ஆண்டில், அவர் வங்க பல் மருத்துவ சங்கத்தை நிறுவினார், பின்னர் அது இந்திய பல் மருத்துவ சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்திய அரசு அவருக்கு 1964 ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கியது. இவர் இந்திய பல் மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படுகின்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ரபியுதீன் அகமது டிசம்பர் 24, 1890 அன்று, பிரிட்டிஷ் இந்தியாவின் கிழக்கு வங்காளத்தின் பர்தன்பராவில் பிறந்தார்; மவ்லவி சபியுதீன் அகமது மற்றும் பைசுன்னிஷாவின் இரண்டாவது குழந்தையான அவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர், பின்னர் தனது ஆரம்பக் கல்வியை டாக்கா மதரஸா, பின்னர் கல்லூரிப் பள்ளியிலும் முடித்தார். 1908 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.