பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vetrrich Chelvan பக்கம் பேச்சு:அகனள், அகனன், ஈரர், திருனர் என்பதை பேச்சு:மகிழ்வர் மற்றும் திருனர் என்பதற்கு நகர்த்தினார்: அதிகாரப்பூர்வமான தமிழ்ப்பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரிசை 104:
 
== மாற்றுப் பெயர் ==
 
அன்புடையோருக்கு, மகிழ்வர் என்கிற சொல்லே தற்பால் விழைவோரைக் குறிக்கப் பயன்படும், புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது. ஒரு பெயரென்பது அது குறிக்கும் சமூகத்தாரின் மனமொக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் ஆங்கிலத்தில் பயன்படும் கே என்கிற சொல்லின் மொழிப்பெயர்ப்பாக வந்தது தான் இந்த மகிழ்வன் என்கிற சொல். மகிழ்ச்சிக்கு உவகை, களிப்பு உள்ளிட்ட வேறு பல சொற்கள் உள்ளன என்பதை நாம் அறிகின்ற போதிலும், அத்தகை சமூகத்தார் விரும்பும் பெயரே அதிகார்ப்பூர்வமாய் அமையும் (அமையப் பெற்றிருக்கின்றது) என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பக்கத்தின் தலைப்பை மாற்றி அமைக்கிறேன். மகிழ்வர் என்கிற சொல் சமூகத்தார் அல்லாத பிறரைப் புண்படுத்தினாலோ குழப்பத்துக்கு உள்ளாக்கும் சொல் என்று வாதிடும் பட்சத்திலோ, அச்சொல்லை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைத் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். பாலின அடையாளம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதை மனம்பால் வைத்து அச்சொல்லை அந்தச் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாய் பெருமையுடன் அறிவிப்பதில் என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சி கொள்வீரென நம்புகிறேன்.
 
மேற்கண்ட உரையாடலுக்கு இணங்க Lesbian, Gay ஆகிய சொற்களுக்கான தமிழ்ப் பெயர் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ஆண் / பெண் தற்பால் சேர்க்கையாளர், ஆண் / பெண் ஓரினச் சேர்க்கையாளர் என்பது போல் பாலியல் நாட்டத்தை விவரித்து வரும் பெயர்கள் இச்சமூகத்தவரைப் புண்படுத்துவன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். பரிந்துரைக்கப்படும் பெயர்கள் வேர்ச்சொற்களை அடிப்படையாகக் கொண்டோ இலக்கியங்களில் காணப்படும் பெயர்களைக் கொண்டோ அமையலாம். புழக்கத்தில் இருக்கும் பெயர்களையும் இங்கு குறிப்பிடலாம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:47, 19 நவம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நங்கை,_நம்பி,_ஈரர்,_திருனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நங்கை, நம்பி, ஈரர், திருனர்" page.