சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 44:
== ஓவியத்தின் பின் வரலாறு ==
 
தாலீ வரைந்த கிறித்து ஓவியத்தையும் அதற்கான உடைமை உரிமையையும் கிளாசுகோ நகரக் கலைகூடத்தின் இயக்குநர் டாம் ஹனிமேன் (''Tom Honeyman'') என்பவர் 1950களில் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை 8,200 பவுண்டுகள் ஆகும். பட்டியலில் குறிக்கப்பட்ட விலையாகிய 12,000 பவுண்டை விடவும் அவர் கொடுத்த விலை குறைவாக இருந்த போதிலும், அது அதிகமாகவே கருதப்பட்டது. ஆனால், உடைமை உரிமையும் கூடவே வாங்கப்பட்டதால், பின்வந்த ஆண்டுகளில் கிளாசுகோ கலைக்கூடம் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை இலாபமாக ஈட்டியது.<ref name=AKN>{{cite web|title=Salvador Dali's 'Christ of St John of the Cross' Scotland's Favorite|url=http://www.artknowledgenews.com/Salvador_Dali-Christ_of_St_John_of_Cross-Scotland.html|work=Art Knowledge News|accessdate=6 April 2012|archive-date=1 டிசம்பர் 2011|archive-url=https://web.archive.org/web/20111201205652/http://www.artknowledgenews.com/Salvador_Dali-Christ_of_St_John_of_Cross-Scotland.html|dead-url=dead}}</ref>
 
தாலீயின் ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியது. கிளாசுகோ நகர் கலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், அந்த ஓவியத்தை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைத் தமது பகுதியைச் சார்ந்த கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதே முறை என்று கூறி புகார் கொடுத்தார்கள்.<ref>{{cite web|title=Controversy|url=http://www.glasgowlife.org.uk/museums/our-museums/kelvingrove/about-Kelvingrove/TheRestorationofKelvingroveArtGalleryandMuseum/ChristofStJohnoftheCross/Pages/Controversy.aspx|publisher=Glasgow Museums|accessdate=6 April 2012|archive-date=20 நவம்பர் 2012|archive-url=https://web.archive.org/web/20121120142025/http://www.glasgowlife.org.uk/museums/our-museums/kelvingrove/about-Kelvingrove/TheRestorationofKelvingroveArtGalleryandMuseum/ChristofStJohnoftheCross/Pages/Controversy.aspx|dead-url=dead}}</ref>
 
இதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக ஹனிமேனும் தாலீயும் கடிதத் தொடர்புகொண்டு நண்பர்கள் ஆனார்கள். அக்கடிதத்தொடர்பு ஓவியச் சர்ச்சைக்குப் பிறகு பல ஆண்டுகளாக நீடித்தது.<ref name=BBC>{{cite web|last=Davies|first=Gill Davies|title=Scotland's favourite painting: Dali's Christ of St John of the Cross|url=http://www.bbc.co.uk/scotland/arts/scotlands_favourite_painting_dalis_christ_of_st_john_of_the_cross.shtml|publisher=BBC Scotland|date=23 June 2011}}</ref>