"மங்கோலியக் குதிரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
[[File:Mongolian-horse.jpg|thumb|left|பாரம்பரிய சேணத்துடன் பிடரி வெட்டப்பட்ட ஒரு மங்கோலியக் குதிரை]]
 
'''மங்கோலியக் குதிரை''' ([[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]] Адуу, ''அடூ'': "குதிரை" அல்லது ''மோரி''; அல்லது குதிரைக் கூட்டம் - ''அடோ'') என்பது [[மங்கோலியா|மங்கோலியாவைப்]] பிறப்பிடமாகக் கொண்ட ஒரு [[குதிரை]] வகை ஆகும். [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] காலத்தில் இருந்தே இவ்வகைக் குதிரைகள் பெரிதாக மாற்றத்திற்கு உள்ளாகவில்லை என்று கூறப்படுகிறது. பாரம்பரிய மங்கோலியப் பாணியில் வாழ்க்கை நடத்தும் [[நாடோடி|நாடோடிகள்]] இன்றும் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட இவ்வகை விலங்குகளை வைத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மங்கோலியாவின் மக்கட்தொகையை விட அதிகம் ஆகும். [[மங்கோலியா|மங்கோலியாவில்]] ஆண்டு முழுவதும் இக்குதிரைகள் வெட்ட வெளியில் வாழ்கின்றன. கோடையில் {{convert|30|C}} முதல் குளிர்காலத்தில் {{convert|-40|C}} வரையிலான தட்பவெப்பத்தைத் தாங்கி வாழ்கின்றன. தாமாகவே மேய்ச்சலில் ஈடுபட்டுத் தமக்கான உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. குதிரையின் பாலில் இருந்து தேசிய பானமான [[குமிஸ்|''அயிரக்'']] தயாரிக்கப்படுகிறது. சில விலங்குகள் மாமிசத்திற்காகக் கொல்லப்படுகின்றன. இது தவிர இவை சவாரி மற்றும் பயண விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாடோடிகளின் தினசரி வேலைகள் மற்றும் குதிரைப் பந்தயத்திற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.<ref name="columbia1">{{cite web|url=http://afe.easia.columbia.edu/mongols/pastoral/masson_smith.pdf|title=Masson Smith|publisher=afe.easia.columbia.edu|access-date=2014-08-25}}</ref>
6,559

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282359" இருந்து மீள்விக்கப்பட்டது