மங்கோலியக் குதிரை
மங்கோலியக் குதிரை (மொங்கோலியம் Адуу, அடூ: "குதிரை" அல்லது மோரி; அல்லது குதிரைக் கூட்டம் - அடோ) என்பது மங்கோலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு குதிரை வகை ஆகும். செங்கிஸ் கானின் காலத்தில் இருந்தே இவ்வகைக் குதிரைகள் பெரிதாக மாற்றத்திற்கு உள்ளாகவில்லை என்று கூறப்படுகிறது. பாரம்பரிய மங்கோலியப் பாணியில் வாழ்க்கை நடத்தும் நாடோடிகள் இன்றும் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட இவ்வகை விலங்குகளை வைத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மங்கோலியாவின் மக்கட்தொகையை விட அதிகம் ஆகும். மங்கோலியாவில் ஆண்டு முழுவதும் இக்குதிரைகள் வெட்ட வெளியில் வாழ்கின்றன. கோடையில் 30 °C (86 °F) முதல் குளிர்காலத்தில் −40 °C (−40 °F) வரையிலான தட்பவெப்பத்தைத் தாங்கி வாழ்கின்றன. தாமாகவே மேய்ச்சலில் ஈடுபட்டுத் தமக்கான உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. குதிரையின் பாலில் இருந்து தேசிய பானமான அயிரக் தயாரிக்கப்படுகிறது. சில விலங்குகள் மாமிசத்திற்காகக் கொல்லப்படுகின்றன. இது தவிர இவை சவாரி மற்றும் பயண விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாடோடிகளின் தினசரி வேலைகள் மற்றும் குதிரைப் பந்தயத்திற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.[1]
மங்கோலியப் பேரரசின் 13ஆம் நூற்றாண்டுப் படையெடுப்புகளில் மங்கோலியக் குதிரைகள் முக்கியப் பங்கு வகித்தன.
உசாத்துணை
தொகு- ↑ "Masson Smith" (PDF). afe.easia.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.