பகிர்வுப் பெற்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 5:
''பறவைக் கூடு காப்பு'' என்ற சிறப்பு வகை பகிர்வுப் பெற்றோர் முறையில் குழந்தைகள் எப்போதும் தங்கள் இல்லத்திலேயே வாழ்ந்திருக்க, அன்னையும் தந்தையும் முறை எடுத்து அவர்களுடன் தங்குவதாகும். இத்தகைய முறை நெடுங்கால ஏற்பாடாக கொள்வது கடினமாக இருக்கும்; மூன்று இல்லங்களை பராமரிக்க வேண்டியிருப்பதால் செலவு கூடுதலாகும். எனவே இத்தகைய முறை தற்காலிகமாக, பெற்றவரில் ஏதேனும் ஒருவர் தகுந்த இல்லத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை, மேற்கொள்ளப்படுகின்றது.<ref>Duhaime's Law Dictionary, [http://www.duhaime.org/LegalDictionary/B/BirdsNestCustody.aspx Bird's Nest Custody Definition]</ref>
 
== நிகழ்வுகள் ==
பகிர்வுப் பெற்றோர் முறை கூடுதலாகப் பரவி வருகின்றது. குழந்தைக் காப்பை ஒருவரிடையே மட்டுமே ஒப்படைப்பதும் பகிர்வுப் பெற்றோர் முறையும் வெவ்வேறு நாடுகளில் பலவிதமாக உள்ளது. எசுக்காண்டினாவியாவில் இது மிகவும் பரவலாக உள்ளது.<ref name=Fransson/><ref name="Collins"/><ref name="Nielsen">{{cite journal|title= Joint Versus Sole Physical Custody: Children's Outcomes Independent of Parent–Child Relationships, Income, and Conflict in 60 Studies|journal = Journal of Divorce & Remarriage|volume = 59|issue = 4|pages = 247–281|author=Linda Nielsen|date= 2018|doi= 10.1080/10502556.2018.1454204|s2cid = 149954035}}</ref>
 
2005/06இல் முப்பத்து நான்கு மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பகிர்வுப் பெற்றோராலும் தனிப் பெற்றோராலும் வளர்க்கப்பட்ட 11-15-அகவை சிறுவரிடையேயான விகிதம் [[சுவீடன்]] (17%), [[ஐசுலாந்து]] (11%), [[பெல்ஜியம்]] (11%), [[டென்மார்க்]] (10%), [[இத்தாலி]] (9%), [[நோர்வே]] (9%) என இருந்தது. மாறாக [[உக்ரைன்]], [[போலந்து]], [[குரோவாசியா]], [[துருக்கி]], [[நெதர்லாந்து]] மற்றும் [[உருமேனியா]] நாடுகளில் இந்த விகிதம் 2% அல்லது அதற்கும் குறைவாகவே இருந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் [[கனடா]], [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] 7% ஆகவும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] மற்றும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] 5% ஆகவும் இருந்தது.<ref>Bjarnason T, Arnarsson AA. [http://www.nuigalway.ie/hbsc/documents/2011__ja__bjarnason__joint_custody__jcfm_426.pdf Joint Physical Custody and Communication with Parents: A Cross-National Study of Children in 36 Western Countries], Journal of Comparative Family Studies, 2011, 42:871-890.</ref>
 
[[எசுக்காண்டினாவியா]] நாடுகளில் பகிர்வுப் பெற்றோர் முறையின் பரவல் கூடுதலாகி வருகின்றது.<ref name=Fransson>{{Cite journal|last1=Fransson|first1=Emma|last2=Sarkadi|first2=Anna|last3=Hjern|first3=Anders|last4=Bergström|first4=Malin|date=2016-07-01|title=Why should they live more with one of us when they are children to us both?: Parents' motives for practicing equal joint physical custody for children aged 0–4|journal=Children and Youth Services Review|volume=66|pages=154–160|doi=10.1016/j.childyouth.2016.05.011|doi-access=free}}</ref><ref name="Collins">{{cite news|url=https://www.deseretnews.com/article/865646816/What-shared-parenting-could-mean-to-kids-after-divorce.html|title= What 'shared parenting' is and how it can affect kids after divorce|author=Lois M Collins|date=February 5, 2016|newspaper= Deseret News}}</ref><ref name="Nielsen" /> 2016/17 ஆண்டில் சுவீடனில் இது 28 விழுக்காடாக உயர்ந்துள்ளது; இதில் 26% சிறுவர்கள் 0-5 அகவை கொண்டவர்களாகவும், 34% சிறுவர்கள் 6-12 அகவையினராகவும், 23% சிறுவர்கள் 13-18 அகவையினராகவும் இருந்தனர்.<ref>Statistics Sweden, [https://www.scb.se/hitta-statistik/statistik-efter-amne/levnadsforhallanden/levnadsforhallanden/undersokningarna-av-levnadsforhallanden-ulf-silc/pong/tabell-och-diagram/boende/barns-boende-vaxelvis-boende-hos-mamma-hos-pappa-etc6.-2012-2017/ Barns boende (växelvis boende, hos mamma, hos pappa, etc.) 2012—2017], November 11, 2018.</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பகிர்வுப்_பெற்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது