எகுலிங்கு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
{{Chinese|t=野狐嶺戰役|s=野狐岭战役|p=Yěhúlǐng Zhànyì}}
'''எகுலிங்கு யுத்தம்''' என்பது மங்கோலியப் பேரரசுக்கும் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் நடைபெற்ற முக்கியமான யுத்தம் ஆகும். இலக்கிய ரீதியாக இதன் பொருள் '''காட்டு நரி மலைத்தொடர் யுத்தம்''' என்பதாகும். மங்கோலியர்கள் சின் அரசமரபை வென்று கொண்டிருந்ததன் முதல் கட்டமாக இந்த யுத்தம் நடைபெற்றது. இது 1211ஆம் ஆண்டு ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் எகுலிங்கு (野狐嶺; பொருள். "காட்டு நரி மலைத்தொடர்") என்கிற இடத்தில் நடைபெ‌ற்றது. இது தற்போது சீனாவின் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்கில் ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணத்தில் உள்ளது. இந்த யுத்தத்தில் மங்கோலியப் பேரரசு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. யுத்தத்துக்குப் பிறகு சின் பேரரசர் வன்யன் யோங்ஜி தன் தளபதிகளில் ஒருவராலேயே கொல்லப்பட்டார். இந்த யுத்தத்தின் விளைவாக சின் பேரரசு பலவீனமடைந்து சீக்கிரமே அழிந்து போனது.
 
== பின்புலம் ==
1206ஆம் ஆண்டு [[செங்கிஸ் கான்|தெமுசின்]] மங்கோலியாவில் இருந்த அனைத்துப் பழங்குடியினங்களையும் ஒன்றுபடுத்தினார். தனது ஆட்சியைக் கொண்டு வந்தார். "செங்கிஸ் கான்" என்ற பட்டம் பெற்றார். உலகை வெல்ல வேண்டும் என்ற [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] குறிக்கோளுக்கு ஒரு பெரிய இடைஞ்சலாக வடக்கு சீனாவில் இருந்த [[சுரசன்கள்|சுரசன்களால்]] ஆளப்பட்ட [[சின் வம்சம் (1115–1234)|சின் அரசமரபானது]] திகழ்ந்தது. முற்காலத்தில் சின் அரசமரபானது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு பல்வேறு மங்கோலிய பழங்குடி இனங்களை பிரித்துத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. எனினும் தங்களது சூழ்ச்சி நீண்ட காலத்திற்கு பயனளிக்காது என்பதை உணர்ந்த அவர்கள் மங்கோலிய ஆபத்தை ஒரே படையெடுப்பில் ஒழித்து விடும் நோக்கத்தோடு போருக்குத் தயாராக ஆரம்பித்தனர். பேரரசர் சங்சோங்கின் ஆட்சியில் ஒரு தொடர்ச்சியான பாதுகாப்பு கட்டமைப்புகளை சுமார் 300 கிலோ மீட்டருக்கு தங்களது வடக்கு எல்லையில் சின் அரசமரபானது அமைத்தது. இது சில நேரங்களில் "சின் அரசமரபின் பெருஞ்சுவர்" என்று அழைக்கப்படுகின்றது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/எகுலிங்கு_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது