கர்சன்பாய் படேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
 
'''கர்சன்பாய் கோதிதாசு படேல்''' ''(Karsanbhai Khodidas Patel)'' (பிறப்பு 1945, இரப்பூர், [[மெக்சனா]], [[குசராத்து|குசராத்]] ) இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] தொழிலதிபர் ஆவார். இவர், [[சீமைக்காரை]], [[சவர்க்காரம்]], சோப்புகள் மற்றும் [[ஒப்பனைப் பொருட்கள்]] போன்ற முக்கியப் பொருட்களுடன் ரூ.42,500 கோடி மதிப்புள்ள கொண்ட நிர்மா குழுவை நிறுவியவராவார். 2017 ஆம் ஆண்டில் [[போர்ப்ஸ்]] பத்திரிக்கை இவரது நிகர மதிப்பை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பட்டியலிட்டது, அவருக்கு கல்வியில் ஆர்வம் இருந்தது. மேலும் முன்னணி பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் முன்னணி மருந்தியல் கல்லூரி (நிர்மா மருந்தியல் தொழில்நுட்ப நிறுவனம்) போன்றவற்றை நிறுவினார்.
 
== வாழ்க்கை ==
வடக்கு குசராத்தில் இருந்து ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது வேதியியலில் இளங்கலை அறிவியல் பாடத்தை 21 வயதில் முடித்து, பின்னர் ஒரு ஓர் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். முதலில் [[கஸ்தூரிபாய் லால்பாய்|லால்பாய் குழுவின்]] [[அகமதாபாத்|அகமதாபாத்தில்]] உள்ள நியூ காட்டன் ஆலையில், பின்னர் மாநில அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றில் பணியாற்றினார்.
 
==தொழில்==
1969 ஆம் ஆண்டில், தனது வீட்டின் பின்பக்கம் இவர் சவர்க்காரப் பொடியை தானே தயாரித்து விற்கத் தொடங்கினார். இது இவரது அலுவலக நேரத்திற்குப் பிந்தைய வணிகமாகும். தன்னந்தனியே வீட்டுக்கு வீடு சென்று மிதிவண்டியில் சென்று ஒரு கிலோ பொடி மூன்று ரூபாய்க்கு விற்றார். இது ஒரு ஓர் உடனடி வெற்றியானது. இவர் தனது சவர்க்காரத்திற்கு தனது மகளின் பெயரான நிருபமா என்பதை நிர்மா எனப் பெயரிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது வேலையை விட்டு விலகும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருந்தார். பின்னர் இவர் கூறினார், "என் குடும்பத்தில் இதுபோன்ற எந்த முன்னுதாரணமும் இல்லாததால், இந்த முயற்சி தோல்வியின் பயத்துடன் போராடியது. ஆனால் வடக்கு குசராத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிறுவன ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள். " இவர் அகமதாபாத் புறநகரில் உள்ள சிறிய பட்டறையில் கடையினை அமைத்தார். நிர்மா என்ற பொருள் குசராத் மற்றும் [[மகாராட்டிரம்|மகாராட்டிராவில்]] விரைவாக தன்னை நிலைநிறுத்தியது.
 
== வெற்றி ==
சவர்க்காரத்தின் உயர் தரம் மற்றும் குறைந்த விலை பெரும் மதிப்புக்காக தயாரிக்கப்பட்டது. ஒரு ஓர் இல்லத்தரசியின் விருப்பமாக எடுக்கப்பட்ட விளம்பர பாடல்களால் தூண்டப்பட்ட, நிர்மா சவர்க்காரச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி, சவர்க்காரத் தூளுக்கு பொருளாதாரத்தில் முற்றிலும் புதிய பிரிவை உருவாக்கியது. அந்த காலத்தில், சவர்க்கார உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது. [[ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்|இந்துஸ்தான் யூனிலீவர்]] நிறுவனத்தின் சர்ப் ஒரு கிலோவுக்கு 13 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது.. ஒரு தசாப்தத்திற்குள், நிர்மா இந்தியாவில் அதிக விற்பனையான பொருளாக மாரியதுமாறியது. உற்பத்தி உழைப்பு மிகுந்ததாக இருந்ததால், இவரும் ஒரு முன்னணி முதலாளியாக ஆனார் (2004இல் 14,000 பேருக்கு வேலை.) சில பாஸ்பேட்டுகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட, நிர்மாவும் சற்றே சூழல் நட்புடன் இருந்தது.
 
பொருளாதாரம் சார்ந்த சவர்க்காரங்களில் அதன் தலைமையை நிறுவிய பின்னர், நிர்மா பிரீமியம் பிரிவில் நுழைந்தது. குளியறைகுளியலறை சவர்க்காரத்தை அறிமுகப்படுத்தியது. ஷாம்பு மற்றும் பற்பசையில் முயற்சி மேற்கொள்ளப்படதில் வெற்றிகரமாக இல்லை. ஆனால் உண்ணக்கூடிய சுத் உப்பு சிறப்பாக செயல்படுகிறது. லைஃப் பாய் மற்றும் லக்ஸ் சவர்க்கரங்களுக்குப் பின்னால், முன்னணி சோப்புகளில் ஒன்று நிர்மா பியூட்டி சோப் இருக்கிறது. ஒட்டுமொத்த நிர்மாவிற்கு சோப்பு கேக்குகளில் 20% சந்தைப் பங்கும், சவர்க்காரங்களில் 35% சந்தைப் பங்கும் உள்ளது. அண்டை நாடுகளிலும் நிர்மாவின் வெற்றிகரமான செயல்பாடுகள் உள்ளன.
 
== கல்வி நிறுவனங்கள் ==
1995 ஆம் ஆண்டில், இவர் அகமதாபாத்தில் நிர்மா தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கினார். இது குசராத்தில் ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியாக வளர்ந்தது. ஒரு மேலாண்மை நிறுவனத்தைத் தொடர்ந்து, முழு கட்டமைப்பையும் நிர்மா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மேற்பார்வையில் 2003 இல் நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. தொழில்முனைவோருக்குதொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்மலாப்ஸ் கல்வித் திட்டம் 2004 இல் தொடங்கப்பட்டது.
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/கர்சன்பாய்_படேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது