சென்னகேசவர் கோயில், பேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 73:
== கோயில் வளாகம் ==
[[படிமம்:Shilabaalika on pillar bracket in Chennakeshava Temple at Belur3.jpg|thumb|200px|சென்னகேசவர் கோயில் உட்புறம்]]
இக் கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட [[இராசகோபுரம்]] அமைந்துள்ளது. இவ் வளாகத்தின் மையப் மகா பகுதியில் சென்னகேசவர் கோயில் [[கிழக்கு]] நோக்கியபடி உள்ளது. இதன் இரு மருங்கிலும், வலது பக்கத்தில், காப்பே சான்னிக்கிரயர் கோயிலும், ஒரு சிறிய [[இலக்குமி]] கோயிலும், இடது புறத்திலும், பின்புறத்திலும் [[ஆண்டாள்]] கோயிலும் அமைந்துள்ளன. இங்கு காணப்படும் இரண்டு தூண்களுள் ஒன்று விஜயநகரக் காலத்தையும் மற்றது போசளப் பேரரசுக் காலத்தையும் சேர்ந்தது. இதுவே முதல் போசளக் கோயிலாக இருந்தபோதும் இதன் கட்டிடக்கலை சாளுக்கியக் கலைப் பாணியைச் சேர்ந்ததாகவே உள்ளது. [[ஹளபீடு|ஹளபீட்டில்]] உள்ள [[ஹோய்சலேஸ்வரர் கோயில், ஹளபீடு|ஹோய்சலேஸ்வரர் கோயில்]] மற்றும் சோமநாதபுரத்து [[கேசவர் கோயில், சோமநாதபுரம்|கேசவர் கோயில்]] ஆகியவை போன்ற பிற்கால போசளக் கோயில்களைப் போல் அளவுக்கு அதிகமான அலங்கார வேலைப்பாடுகள் இக் கோயிலில் இல்லை.
 
இக் கோயிலுக்கு மூன்று [[வாயில்]]கள் உள்ளன. இவற்றின் [[கதவு]]கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வாயிற்காவலர் சிற்பங்களோடு அமைந்துள்ளன. காப்பே சன்னிக்கிரயர் கோயில் சென்னகேசவர் கோயிலிலும் சிறிதாக இருந்த போதிலும், கட்டிடக்கலை அடிப்படையில் அதேயளவு முக்கியத்துவம் கொண்டது. ஆனாலும், இதில் [[சிற்பம்|சிற்ப]] வேலைப்பாடுகள் இல்லை. பிற்காலத்தில் இன்னொரு கர்ப்பக்கிருகம் சேர்க்கப்பட்டதுடன் இது இரட்டைக் கோயிலாக ஆனது. முன்னையது நட்சத்திர வடிவில் அமைந்திருக்கப் பின்னது எளிமையான நாற்பக்க வடிவுடையதாக இருக்கிறது. இரண்டாவது கோயிலிலும் கேசவருடைய [[சிலை]]யே இருக்கிறது. இது விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலா தேவியினால் கட்டுவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னகேசவர்_கோயில்,_பேளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது