பேச்சு:உவர் நீர் முதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
:: விலங்கியலாளர்கள் முதலைகளை நன்னீர் முதலை, உப்புநீர் முதலை என பிரிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இவற்றை நான்கு பெரும் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் Crocodylidae எனும் குடும்பத்தினைச் சார்ந்தவை உண்மையான முதலைகள் எனப்படுகின்றன. இவை நன்னீரிலும் (freshwater)(Crocodylus novaeguineae), உவர்ப்புத் தன்மையுடைய நீர் நிலைகளான உப்பங்கழிப் பகுதியில் கடற்கரை ஓரம் (Crocodylus porosus) வாழ்பவைகளாகவும் உள்ளன. நன்னீரில் வாழும் முதலைகள் சூழல் காரணமாக உப்பு தண்ணீரில் வாழ நேர்ந்தால் அதற்கும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நிலையிலுள்ளன. --[[பயனர்:சத்திரத்தான்|சத்திரத்தான்]] ([[பயனர் பேச்சு:சத்திரத்தான்|பேச்சு]]) 16:08, 11 சனவரி 2022 (UTC)
 
இல்லையே. இப்போதும் நீங்கள் சொல்வதை மெய்ப்பிக்கத் தக்க சான்றில்லை. மொத்தமாகப் பதினெட்டு இனங்களே முதலையினங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பதினான்கு இனங்கள் Crocodylus சாதியைச் சேர்ந்தவை, இரண்டு இனங்கள் Osteolaemus சாதியைச் சேர்ந்தவை, இரண்டு இனங்கள் Mecistops சாதியைச் சேர்ந்தவை. இங்கே கட்டுரையில் குறிப்பிடப்படும் இனம் Crocodylus சாதியைச் சேர்ந்த பதினான்கு இனங்களில் ஓரினம் மட்டுமே. நீங்கள் சொல்வது போல நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கோ மற்றச் செய்திகளுக்கோ ஏற்கத் தக்க விஞ்ஞானச் சான்றெதுவும் கிடையவே கிடையாது. இவ்வாறிருக்கையில், உவர்நீர் முதலை என்று ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கே கட்டுரையில் குறிப்பிடப்படும் இனத்தை அழைப்பது ஆங்கிலத்தின் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புக்குச் சரியாகத் தோன்றினாலும், காலங்காலமாக இவ்வினம் அழைக்கப்படும் வழக்கம் வேறு விதமாக இருக்கும் நிலையில் அவ்வாறு காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் அச்சொல்லையோ சொற்களையோ பயன்படுத்துவதே சரியான மொழிபெயர்ப்பும் தமிழ் முறையும் ஆகும். எடுத்துக் காட்டாக, rainforest என்பதை மழைக்காடு என்று இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதன் சரியான தமிழ் வடிவம் பொழில் என்பதே. அங்ஙனமே waterfall என்பதை நீர்வீழ்ச்சி என்று இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதன் சரியான தமிழ் வடிவம் அருவி என்பதே. இங்ஙனமே, உயிரினங்களின் பெயர்களும் முடிந்தவரை தமிழில் முற்காலத்திலிருந்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அவ்வாறே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே சரியானது. இங்கே முறைப்படி தமிழில் முற்காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் முறையை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டுமே தவிர, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதையல்ல. ஆங்கிலவழித் தமிழாக்கம் என்பது தமிழ் முறைக்குப் பிழையாதுபிழையானது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 18:26, 11 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உவர்_நீர்_முதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உவர் நீர் முதலை" page.