'''வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு''' (Life life-cycle analysis) என்பது ஒரு குறிப்பிட்ட [[உற்பத்திப் பொருள்]] அல்லது சேவையினால் சூழலில் ஏற்படும் தாக்கங்களின் மொத்த விளைவை ஆய்வு செய்யும் அல்லது [[மதிப்பீடு]] செய்யும் ஒரு முறை ஆகும். இது ஒரு உற்பத்திப் பொருளுக்கும் சூழலுக்கும் இடையே அதன் தோற்றத்தில் இருந்து அழியும் வரையில் இருக்கக்கூடிய தொடர்புகளை ஆராய்ந்து மதிப்பிடுகிறது. இதனை ''வாழ்க்கை வட்ட மதிப்பீடு'' என்றும் அழைப்பதுண்டு. இது அப்பொருளை உற்பத்தி செய்வதற்கு மூலப் பொருட்களை நிலத்தில் இருந்து எடுப்பது தொடக்கம் இறுதியில் அப்பொருள் மண்ணுக்கே திரும்பிச் செல்லும் வரையான எல்லாக் கட்டங்களையும் அது கவனத்தில் கொள்கிறது.