வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
விக்கியிணைப்பு
சிNo edit summary
வரிசை 45:
==== வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து ====
 
முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822-இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840-இல் வெளியிட்டார். அவர் 1840-இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843-இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798-இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.<ref>[https://www.dinamani.com/editorial-articles/special-stories/2022/aug/26/constantino-giuseppe-beschi-veeramamunivar-history-3905153.html வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்]</ref>
 
வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை ''வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்'' என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் <ref>ச. இராசமாணிக்கம், சே.ச., ''வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்'', தே நொபிலி ஆராய்ச்சி நிலையம், இலயோலாக் கல்லூரி, சென்னை, 1996; 1998 (இரண்டாம் பதிப்பு), பக். 24.</ref>. முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் ''தத்துவ போதகர்'' என்று சிறப்புப்பெயர் பெற்ற [[இராபர்ட் தெ நோபிலி]] என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606-இல் [[மதுரை]] வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16-ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் ''தத்துவ போதகர்'' என்ற பெயர் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது