திருவள்ளுவர் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
==வரலாறு==
தமிழ் ஆண்டுகள் என்னும் பெயரில் [[பிரபவ-விபவ]] என்னும் பெயர்களில் 60 ஆண்டுகள் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வழங்குவது தமிழ் ஆண்டுகள் அல்ல என்றும், அவை வரலாற்றுக்குப் பயன்படாது என்றும் பலர் நினைத்து வந்தனர். தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[மறைமலை அடிகள்]] தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் [[மறைமலை அடிகள்]]. தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற [[திரு. வி. கலியாணசுந்தரனார்]], தமிழ்க் காவலர் [[சுப்பிரமணியப் பிள்ளை]], சைவப் பெரியார் [[சச்சிதானந்தம் பிள்ளை]]. நாவலர் [[நா.மு. வெங்கடசாமி நாட்டார்]], நாவலர் [[சோமசுந்தர பாரதியார்]], முத்தமிழ்க் காவலர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியோர் அடங்குவர்.
 
[[தமிழ்நாடு|தமிழக அரசு]] 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் (Gazette) வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது