மேரி மலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் டைஃபாய்டு மேரி என்பதை மேரி மலான் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 37:
நோய்த்தொற்று ஏற்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சோபர் குறிப்பிட்டிருந்த உடல் தோற்றத்துடன் கூடிய ஐரியப் பெண்மணி சம்பந்தப்பட்டிருந்தாள் என்பதை சோபர் கண்டுபிடித்தார். அவளது இருப்பிடத்தை அவரால் கண்டறியமுடியவில்லை. ஏனென்றால், நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்ததுதான். பார்க் அவெனியூவில் ஒரு கொட்டிலில் நோய்த்தொற்று ஏற்பட்டதையும் அங்கு மலான்தான் சமையல்காரி என்பதையும் கண்டுபிடித்தார் சோபர். அக்குடும்பத்தின் இரண்டு வேலைக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்குடும்பத்தினரின் மகள் டைஃபாய்டு காய்ச்சலால் இறந்து போனாள்.<ref name=TheStraightDope/>
 
மலான்தான் டைஃபாய்டு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்று கருதிய சோபர் அவளை அணுகியபோது, அவள் தனது மலம் மற்றும் மூத்திர மாதிரிகளை ஆய்வுக்குத்தர பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.<ref>{{cite journal|last = Soper|first = George A.|title = The work of a chronic typhoid germ distributor|journal = J Am Med Assoc|volume = 48|pages = 2019–22|date = June 15, 1907|doi=10.1001/jama.1907.25220500025002d}}</ref> மலான் மாதிரிகளைத்தர மறுத்ததால், மலானின் ஐந்து வருட தொழிலைப்பற்றிய தகவல்களைத் தொகுக்க முடிவு செய்தார். மலானை சமையல்காரியாக வேலைக்கமர்த்திய எட்டுக் குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் டைஃபாய்டு தொற்றுக்குள்ளானது என்பதை சோபர் கண்டுபிடித்தார்.<ref name=Satin>{{cite book|last=Satin|first=Morton|title=Death in the Pot|url=https://archive.org/details/deathinpotimpact0000sati|year=2007|publisher=Prometheus Books|location=New York|page=[https://archive.org/details/deathinpotimpact0000sati/page/169 169]}}</ref> அவர் அவளை அடுத்த முறை சந்தித்தபோது, அவர் தன்னுடன் மற்றொரு மருத்துவரை அழைத்துச்சென்றார். ஆனால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். மற்றொரு சமயத்தில், மலானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளைச் சந்தித்த சோபர் அவர் ஒரு புத்தகம் எழுதி அதன் உரிமை முழுவதையும் அவளுக்கே தந்துவிடுவதாகவும் கூறினார். அவரது பரிந்துரையைக் கோபமாக நிராகரித்த அவள் குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவர் செல்லும்வரை வெளியே வரவேயில்லை.<ref>{{Cite episode |title=The Most Dangerous Woman In America|episodelink= |url=https://www.youtube.com/watch?v=8JPCZOb7z2w|accessdate=August 31, 2014|series=Nova|first= |last= |network=[[பொது ஒளிபரப்புச் சேவை]]|station= |city= |date=October 12, 2004|began=|ended=|season= |seriesno= |number=597 |minutes=|time=28:42-29:52|transcript= |transcripturl= |quote= |language=English}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_மலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது