சுமேரியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: af:Sumeriese boustyl, fr:Architecture sumérienne
சி தானியங்கி இணைப்பு: es:Arquitectura sumeria; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Ziggurat of ur.jpg|thumb|250px|ஊர் என்னும் நகரத்தில் உள்ள ஊர்நம்மு என அழைக்கப்படும் சிகரட்டின் மீட்டுருப்படம்]]
[[Imageபடிமம்:Ziggarat of Ur 001.jpg|thumb|250px|ஊர்நம்மு சிகரட்டின் 2006 எடுக்கப்பட்ட படம்]]
'''சுமேரியக் கட்டிடக்கலை''' என்பது [[மெசொப்பொத்தேமியா]] என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய [[ஈராக்]]கில் வாழ்ந்த [[சுமேரியர்]]களால் வளர்த்தெடுக்கப்பட்ட [[கட்டிடக்கலை]]யைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். மெசொப்பொத்தேமியாவில் பாரிய கட்டிடங்களை அமைக்கும் வழக்கம், ஏறத்தாழ கிமு 3100 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், சுமேரியர்களுடைய நகரங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே [[எழுத்து முறை]]யும் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிமு 3 ஆவது ஆயிரவாண்டின் தொடக்கம் வரையான 500 ஆண்டுக்காலப் பகுதியில் சுமேரியர்களால் அமைக்கப்பட்ட சமயச் சார்புடைய [[கட்டிடம்|கட்டிடங்கள்]] கட்டிடக்கலை வடிவமைப்புக்கான முன் முயற்சிகளைத் தெளிவாகக் கட்டுகின்றன. இக் கோயில்கள் இரண்டு வகைகளாகக் காணப்பட்டன. ஒரு வகை மேடைகள் மீது அமைக்கப்பட்ட சிறிய கட்டிடங்களாகும். கோயில்களும், மேடையும் [[சுடாத செங்கல்|சுடாத செங்கற்களினால்]] அமைக்கப்பட்டன. இரண்டாவது வகைக் கோயில்கள் மேடையின்றி நில மட்டத்தில் அமைக்கப்பட்டன.
 
வரிசை 9:
''உபெயிட்'' காலச் சிகரட்டுகள், மேலே செல்லச் செல்ல அளவில் குறைந்து செல்வனவும், ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டனவுமான பல மேடைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன.
 
== நகரங்கள் ==
 
சுமேரியர்களுடையது என அடையாளம் காணப்பட்ட மிகப் பழைய நகரம் [[எரிது]] ஆகும். இங்கே பல கால கட்டங்களையும் சேர்ந்த பல கோயில்கள் இருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இங்கே அகழ்ந்து காணப்பட்ட மிகப் பழைய கோயில் சுமேரியக் கட்டிடக்கலைக்கே உரித்தான இயல்புகளைப் பெறத் தொடங்கிவிட்டதைக் காண முடிகின்றது. இங்கே காணப்படும் பிந்திய கோயில்கள் ஒப்பீட்டளவில் பெரியவை. கருவறை தவிர மேலும் இரண்டு அறைகளை இரு பக்கமும் கொண்டவையாக இவை காணப்படுகின்றன.
 
சுமேரியர்களின் மிகப்பெரிய நகரம் [[வர்க்கா]] ஆகும். இது கிமு 2900 - கிமு 2340 காலப் பகுதியில் 9 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டதாக அமைந்திருந்தது. இதன் [[பரப்பளவு|பரப்பளவின்]] மூன்றில் ஒரு பகுதியில் கோயில்களும், பொதுக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. இந்த நகரத்தில் அமைந்திருந்த கட்டிடங்களுள் முக்கியமானவை தாய்க் கடவுளுக்கும், வானக் கடவுளுக்கும் உரிய இரண்டு கோயில்கள் ஆகும்.
 
 
[[பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்]]
வரி 20 ⟶ 19:
[[af:Sumeriese boustyl]]
[[en:Sumerian architecture]]
[[es:Arquitectura sumeria]]
[[fa:معماری سومری]]
[[fr:Architecture sumérienne]]
"https://ta.wikipedia.org/wiki/சுமேரியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது