வி. பி. சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 14:
| party=[[ஜனதா தளம்]]
| spouse= சீதா குமாரி
| children = அஜய் சிங், அபய்சிங்
| religion=
| signature=
வரி 19 ⟶ 20:
 
'''விஸ்வநாத் பிரதாப் சிங்''' ([[ஜூன் 25]] [[1931]] - [[நவம்பர் 27]], [[2008]]) இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர்.
 
== இளமைகாலம் ==
1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள்.மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.
 
வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பம்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உம்ள பாய்ஸ் உயர்நிலைப்பம்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.
 
அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.
 
1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.
 
== மத்திய அமைச்சர் ==
 
1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.
 
 
இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.
 
==உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர்==
பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் [[ஜனதா கட்சி]]யிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, [[இந்திரா காந்தி]] இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
 
==மத்திய நிதி & பாதுகாப்பு அமைச்சர்==
வரி 40 ⟶ 55:
 
==பிரதமர் தேர்தல்==
இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி.பி.சிங் அவர்களையே '''தூய்மையான''' மாற்று பிரதம் வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவி லாலைதேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான [[தேவி லால்]] அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவி லால்தேவிலால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததை கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவி லால்தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.
 
 
==பிரதம மந்திரி==
வரி 53 ⟶ 69:
===பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு===
தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து [[மண்டல் கமிசன்]] பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
 
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.
 
 
 
வரி 61 ⟶ 80:
தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக [[இராம ஜென்மபூமி]] இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.
 
== இறுதிகாலம் ==
வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.
==இவற்றையும் பார்க்கவும்==
 
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது