"ஈலமைட்டு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: tl:Wikang Elamita; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: hr:Elamski jezik)
சி (தானியங்கிஇணைப்பு: tl:Wikang Elamita; cosmetic changes)
'''ஈலமைட்டு மொழி''' (''Elamite language''), [[ஈலம்|ஈலமைட்டு]] மக்களால் பேசப்பட்டு இன்று அழிந்துவிட்ட ஒரு [[மொழி]]யாகும். இது [[கிமு]] [[கிமு 6ம் நூற்றாண்டு|6ம்]] - [[கிமு 4ம் நூற்றாண்டு|4ம்]] நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] அரச மொழியாக இருந்தது. இம் மொழியிலான கடைசிப் பதிவுகள் ஏறத்தாழ [[பேரரசன் அலெக்சாந்தர்]] பாரசீகப் பேரரசைக் கைப்பற்றிய காலப்பகுதியைச் சேர்ந்தவை.
 
== ஈலமைட்டு வரிவடிவம் ==
[[Imageபடிமம்:ElamischeStrichschrift.jpg|thumb|களிமண் தகட்டில் ஈலமைட்டு வரிவடிவம்]]
பல நூற்றாண்டுக் காலப்பகுதியில் மூன்று வகையான ஈலமட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை [[மூல-ஈலமைட்டு]], [[நீளுருவ-ஈலமைட்டு]], [[ஈலமைட்டு ஆப்பெழுத்து]] என்பனவாகும்.
 
: '''மூல-ஈலமைட்டு''': [[ஈரான்|ஈரானில்]] கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், மூல-[[ஆப்பெழுத்து]]க்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி [[படவெழுத்து]]க்களாக (''logographic'') இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், [[பேச்சு மொழி]]களுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
 
: '''நீளுருவ ஈலமைட்டு''' மூல-ஈலமைட்டு வரிவடிவத்திலிருந்து பெறப்பட்ட [[அசையெழுத்து]] முறையாக இருக்கலாம் எனக் கருதப்படினும் இது ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. இந்த எழுத்து முறை கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] இறுதிக் கால் பகுதியிலேயே புழங்கியதாகத் தெரிகிறது. இதுவும் இன்னும் வாசித்து அறிந்து கொள்ளப்படவில்லை.
 
: '''ஈலமைட்டு ஆப்பெழுத்து''' கி.மு 2500 க்கும் 331 க்கும் இடைப்பட காலப்பகுதியில் புழங்கிய ஒரு வரிவடிவம். இது [[அக்காடிய ஆப்பெழுத்து|அக்காடிய ஆப்பெழுத்தின்]] இசைவாக்கம் ஆகும். இது 130 குறியீடுகளைக் கொண்டுள்ளது. இது பிற ஆப்பெழுத்துகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.
 
== பிற மொழிக் குடும்பங்களுடனான தொடர்புகள் ==
ஈலமைட்டு மொழி, சுமேரிய அசையெழுத்து முறையைக் கைக்கொண்ட போதும்; அயலிலுள்ள [[செமிட்டிய மொழிகள்|செமிட்டிய மொழி]]களுடனோ, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]களுடனோ, [[சுமேரிய மொழி]]யுடனோ நெருங்கிய தொடர்பு எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
 
=== ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும் ===
ஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிகளையும்]] ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழி]]களுடன் நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.
 
[[sv:Elamitiska]]
[[th:ภาษาอีลาไมต์]]
[[tl:Wikang Elamita]]
[[zh:埃蘭語]]
44,230

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/427659" இருந்து மீள்விக்கப்பட்டது