பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: arz:باتريس لومومبا
சி தானியங்கிஇணைப்பு: bo:ཕ་ཁྲི་རི་ཟེ་ལི་མིན་བ།; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Prime Minister
| name = பத்திரிசு லுமும்பா<br />Patrice Lumumba
| image = Patrice_Lumumba_Photo_1960_b.gif
| caption =
வரிசை 23:
'''பத்திரிசு எமெரி லுமும்பா''' (''Patrice Émery Lumumba''), ([[ஜூலை 2]], [[1925]] – [[ஜனவரி 17]], [[1961]]) [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்க]]த் தலைவரும் [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ குடியரசின்]] மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே [[பெல்ஜியம்|பெல்ஜிய]]த்திடம் இருந்து தமது நாட்டை [[ஜூன்]] [[1960]] இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
லுமும்பா [[பெல்ஜிய கொங்கோ]]வில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். [[1955]] இல் பெல்ஜியம் லிபரல் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக [[பெல்ஜியம்]] சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் [[ஜூலை]] [[1956]] இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி கொங்கோ தேசிய இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கத்தை [[1958]] இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். [[டிசம்பர்]] [[1958]] இல் [[கானா]]வில் இடம்பெற்ற அனைத்து ஆபிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா பங்குபற்றினார்.
 
வரிசை 30:
லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் நாட்டை விட்டு வெளியேறினர்<ref name ="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>.
 
== சோவியத் ஆதரவு ==
கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. [[ஐக்கிய நாடுகள்|ஐநா]] படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] உதவியைக் கோரினார்.
 
== கைது ==
[[Imageபடிமம்:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அதிபரினால் சட்டத்துக்கு மாறாக கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|ஜோசப் மோபுட்டு]] இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்<ref name ="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[டிசம்பர் 1]], [[1960]] இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்கு கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் வேறு பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. [[ஐநா]] செயலர் [[டாக் ஹமாஷெல்ட்]] சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]] லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
 
வரிசை 41:
லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
 
== லுமும்பாவின் இறப்பு ==
[[ஜனவரி 17]], [[1961]] இல் லுமும்பா [[பெல்ஜியம்|பெல்ஜிய]] அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்<ref name="bbc-wkl">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.35.38-00.35.49</ref>. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது<ref name="bbc-wkl-1">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.36.57</ref>. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் [[ஜனவரி 17]], [[1961]] இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.
 
வரிசை 47:
 
லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜிய தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/19/newsid_2748000/2748931.stm]
[[Imageபடிமம்:USSR stamp P.Lumumba 1961 2k.jpg|thumb|right|1961 [[சோவியத்]] அஞ்சல் தலை]]
 
== நினைவுச் சின்னங்கள் ==
* [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] [[ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்|சோவியத் மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம்]] [[1961]] இல் "பத்திரிசு லுமும்பா ப்ல்கலைக்கழகம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது<ref>http://www.cnn.com/WORLD/9707/26/russia.university/</ref>.
* [[ஆபிரிக்கா]]வில் பல குழந்தைகளுக்கு "லுமும்பா" என்ற பெயர் வைக்கப்பட்டது<ref>http://news.bbc.co.uk/1/hi/world/africa/3321575.stm</ref>.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்|பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20210274&format=html&edition_id=20021027 லுடோ டெ விட்டே எழுதிய 'லுமும்பா படுகொலை ' புத்தக விமர்சனம்]
* [http://tamilhelp.wordpress.com/2004/02/23/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3/ மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா]
வரிசை 73:
[[arz:باتريس لومومبا]]
[[bg:Патрис Лумумба]]
[[bo:ཕ་ཁྲི་རི་ཟེ་ལི་མིན་བ།]]
[[ca:Patrice Lumumba]]
[[cs:Patrice Lumumba]]
"https://ta.wikipedia.org/wiki/பத்திரிசு_லுமும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது