போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: is:Boeing
சி தானியங்கிமாற்றல்: hy:Բոինգ; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Company
|company_name = போயிங் நிறுவனம்
|company_logo = [[Imageபடிமம்:Boeing-Logo.png|240px|center|]]
|company_type = [[பொதுத்துறை நிறுவனம்]] ({{nyse|BA}}, {{tyo|7661}})
|foundation = [[சியாட்டில்]], [[வாஷிங்டன்]] மாநிலம் (1916)
வரிசை 7:
|key_people = W. ஜேம்ஸ் மெக்நேர்லி ஜுனியர், CEO
|industry = [[வானூர்தி]] தயாரிப்பு மற்றும் [[பாதுகாப்பு துறை]] சாதனங்கள் மற்றும் ஆராய்ட்சி.
|products = வணிகரீதியான வானூர்திகள்
இராணுவ வானூர்தி
இராணுவ தளவாடங்கள்
விண்வெளி கலங்கள்
|revenue = {{profit}} [[அமெரிக்க டாலர்|அமெ$]]66.38 பில்லியன்( 2007)
|operating_income =
வரிசை 14:
|num_employees = 163,851 (2008)
|parent =
|divisions = [[போயிங் வணிக வானூர்திகள்]]
[[போயிங் இணைந்த பாதுகாப்பு அமைப்புகள்]]
|subsid = Aviall, Inc.
Jeppesen
[[போயிங் ஆஸ்திரேலியா]]
[[போயிங் பாதுகாப்பு நிறுவனம், ஐக்கிய இராச்சியம்]]
[[போயிங் வணிக மையம்]]
|homepage = [http://www.boeing.com/ Boeing.com]
|footnotes =

''' போயிங்''' ('' Boeing '') என்னும் நிறுவனம் [[வில்லியம் போயிங்]] என்பவரால் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சியாட்டில்]] நகரில் [[1916]] ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. [[வானூர்தி]] தயாரிப்புத் துறையிலும், [[விண்வெளி]], மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையிலும் சிறந்து இது விளங்குகிறது. [[1997]] ஆம் ஆண்டு [[மெக்டொனால்டு டக்ளஸ்]] வானூர்தி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய போயிங் நிறுவனம், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகமெங்கிலும் பல கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் [[சிகாகோ]] நகரில் அமைந்துள்ளது. வணிகநோக்கில், [[பயணிகள் வானூர்தி|பயணிகள்]] மற்றும் [[சரக்கு வானூர்தி|சரக்கு]] வானூர்தி தயாரிப்பில் உலகில் முதல் இடத்தில் உள்ளது. போயிங் நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் [[பங்குச் சந்தை|பங்கு]], [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு|டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின்]] அங்கமாகும்.

== வரலாறு ==
=== 1950ஆம் ஆண்டுக்கு முன் ===
போயிங் நிறுவனம் [[ஜூலை 15]], 1916 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாஷிங்டன்]] மாநிலத்தில் உள்ள [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் எட்வர்ட் போயிங்]] என்பவரால் "பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ" என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் [[கடல்வானூர்தி]]களே. [[1917]] ஆம் ஆண்டு மே மாதம் "போயிங் வானூர்தி நிறுவனம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[யேல் பல்கலைக்கழகம்| யேல் பல்கலைக்கழகத்தில்]] படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.

[[Imageபடிமம்:HPIM1250.jpg|thumb|left| போயிங் நிறுவனத்தின் முதல் வானூர்தியின் மாதிரி வடிவம்.]]
[[1927]] ஆம் ஆண்டு போயிங் நிறுவனம் [[போயிங் வான் போக்குவரத்து கழகம்]] என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை [[பசிபிக் வான் போக்குவரத்து]] மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் [[யுனைடட் வானூர்தி நிறுவனம்]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான [[போயிங் 247]] [[1933]] ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக நோக்கப்படுகிறது. இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது. போயிங் நிறுவனம் தயாரித்த 60 இவ்வகை விமானங்களை அதன் சொந்த கிளை நிறுவனமான [[போயிங் வான்வழி போக்குவரத்து நிறுவனம்]] மட்டுமே பயன்படுத்தியது. இதன் விளைவாக வினைதிறனற்ற மற்ற பலவகை விமானங்களை மட்டுமே நம்பி வணிகம் செய்து வந்த பல வான்வழி போக்குவரத்து நிறுவனங்கள் நலிவடைந்தன. [[வர்த்தக தனியுரிமை]]யை எதிர்க்கும் அமெரிக்க அரசாங்கம் 1934 ஆம் ஆண்டு நலிவடைந்த நிறுவனங்களை காப்பாற்ற [[ஏர் மெயில் சட்டத்தை]] நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி வானூர்தி உற்பத்தியில் ஈடுபடும் எந்த நிறுவனமும் வான்வழி போக்குவரத்து வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக போயிங் நிறுவனம், மூன்று சிறிய நிறுவனமாக பிரிக்கப்பட்டது. அவையாவன [[போயிங் வானூர்தி]] நிறுவனம், [[யுனைடட் வான்வழிகள்]] நிறுவனம், மற்றும் [[யுனைடட் வானூர்தி மற்றும் போக்குவரத்து கழகம்]].

[[Imageபடிமம்:Boeing 314 Clipper.jpg|thumb|right|The போயிங் நிறுவனம் 314 Clipper]]
போயிங் நிறுவனம் [[பான் அமெரிக்கன் உலக வான்வழிகள்]] நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்ததின்படி அட்லாண்டிக் கடலை கடந்து செல்லவல்ல பயணிகள் விமானங்களை உருவாக்கும் முயற்சியில், [[போயிங் 314 கிளிப்பர்]] என்ற புதிய வானூர்தி வடிவமைக்கப்பட்டது. போயிங் 314 கிளிப்பர் வானூர்தி தனது முதல் பயணத்தை ஜுலை 1938 ஆம் ஆண்டு துவக்கியது. அன்றைய காலக்கட்டதில் மிகப்பெரிய வானூர்தியான இவ்வூர்தி, சுமார் 90 பயணிகளை கொண்டு செல்லும் திறன் பெற்றது. இவ்விமானம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய ராச்சியத்திற்கும் இடையே இயக்கப்பட்டது.

[[1938]] ஆம் ஆண்டு, போயிங் நிறுவனம் தயாரித்த [[போயிங் 307]] விமானம். முதன்முதலாக காற்றழுத்த கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட வானூர்தியாகும். இவ்விமானம் சுமார் 2000 அடிகளுக்கு மேல் பறக்கும் திறன் வாய்ந்ததால், பூவியின் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையாமல் பயணம் செய்ய வழிவகை செய்தது.
வரிசை 41:

=== 1950ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை ===
[[Imageபடிமம்:Boac 707 at london airport in 1964 arp.jpg|thumb|right| [[போயிங் 707]] (1964ல் எடுக்கப்பட்ட புகைபடம்)]]
[[Imageபடிமம்:Boeing 377 Stratocruiser (B-29) American Overseas 1949-50.jpg|thumb|right| போயிங் 377 ஸ்டேட்டோகுருசர்]]
1950 ஆம் ஆண்டுகளில் இராணுவ [[தாரை வானூர்தி]]களான [[B-47 ஸ்டேட்டோஜெட்]] and [[B-52 ஸ்டேட்டோபோட்டிரஸ்]] ஆகியவற்றை போயிங் தயாரித்தது.
அக்காலக்கட்டத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக போயிங் நிறுவனம் பல புதிய நவின வானூர்திகளையும் இராணுவ தளவாடங்களையும் தயாரித்தது. முதன்முதலாக எதிரி வானூர்திகளை வானில் தாக்கியழிக்க வல்ல வழிகாட்டபட்ட குறைந்த தூர ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.

[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]
வரிசை 71:
[[hr:Boeing]]
[[hu:Boeing]]
[[hy:BoeingԲոինգ]]
[[id:Boeing]]
[[is:Boeing]]
"https://ta.wikipedia.org/wiki/போயிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது