சந்தை விலைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Mark-to-market (revision: 355906734) using http://translate.google.com/toolkit with about 99% human translations.
 
கூகுள் வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{Google}}
{{accounting}}
'''சந்தை விலைப்படுத்துதல்''' அல்லது '''நியாய மதிப்பு கணக்கு வைப்பென்பது''' ஒரு [[நிதியியல் பத்திரத்திற்கு]] அல்லது அதைப் போன்ற பத்திரங்களுக்கு அதில் இருக்கும் ஒரு நிலைக்கு தற்போது நிலவிவரும் நியாயமான [[சந்தை விலை]]யின் அடிப்படையில் ஒரு [[விலை]]யை அளிக்கும் [[கணக்கு வைப்பு]] வரையறைகளாகும். 1990கள் முதல் நியாய மதிப்பு கணக்கு வைப்பானது அமெரிக்க [[பொதுவாக ஏற்கப்பட்ட கணக்கு வைப்புக் கோட்பாடுகளின்]] (ஜீ.ஏ.ஏ.பி) ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மேலும் முதலீடு செய்பவர்களும் ஒரு நிர்வாகம் அல்லது நிறுவனத்துடைய தற்போதைய நிதிநிலையைக் குறித்தான ஒரு நம்பகத்தன்மையான மதிப்பீட்டிற்காக சொத்துக்கள் மற்றும் கடப்பாடுகளை மதிப்பிடும்போது இந்த முறைமையை அதிமகதிகமாக ஆதரிக்கின்றனர். சந்தை விலைப்படுத்துதல் என்பது காலப்போக்கில் மாறக்கூடிய கணக்குகளான சொத்துகள் மற்றும் கடப்பாடுகள் போன்றவைகளின் நியாயமான மதிப்பளிக்கும் கணக்கு வைப்பாகும். ஒரு ஆவணம் முதலீட்டுத்தொகுப்பு (போர்ட்ஃபோலியோ) அல்லது கணக்கு (அகௌண்ட்) அதனுடைய ஏட்டு மதிப்பையல்லாமல் அதனுடைய தற்போதைய சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் வண்ணம் அவைகளில் விலை அல்லது மதிப்பை பதிவு செய்யும் வழக்கமே சந்தை விலைப்படுத்தல் ஆகும். உதாரணத்திற்கு பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் ஃபண்டுகள்) தினசரி அடிப்படையில் சந்தை விலைப்படுத்தப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு நிதியின் நிகர சொத்து மதிப்புக்கான (என்.ஏ.வி) ஒரு அனுமானம் கிட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சந்தை_விலைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது