விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148:
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகம்]]
__NEWSECTIONLINK__
 
== பொதுத்தரம் பேணல்-அனைவருக்கும் பொதுவாக ஒரு வழி! ==
 
மதிப்பிற்குரிய செல்வா, கோபி, நக்கீரன், உமாபதி, மயூரநாதன், ரவிச்சந்திரன், கனகரத்தினம் சிறீதரன் ஆகிய அனைவருக்கும் அன்பு வணக்கம்!
 
விக்கிப்பீடியாவில் பொதுவான எழுத்துத் தரம் பேணல் பற்றிய உங்கள் விவாதங்களை மேலே படித்தேன். மிகவும் ஆழமாகவும் அருமையாகவும் ஆதாரங்களோடு விவாதித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி! ஆனால் கூடவே உணர்ச்சிகரமாகவும் விவாதித்திருப்பதுதான் வருத்தம்!
 
விக்கிப்பீடியாவிற்கு நான் புதியவன். ஆயினும் இதற்காக எனக்குத் தெரிந்த ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன். கனிவு கூர்ந்து அனைவரும் இதைப் பரிசீலிப்பீர்களாக!
 
ஈழம், தமிழ்நாடு ஆகிய இரு தரப்புத் தமிழர்களுமே இதுவரை எடுத்து வைத்திருக்கும் மேற்கண்ட விவாதங்களிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகிறது. இருவரின் ஒலிப்பு முறையுமே சரிதான் என்பதுதான் அது. ஏனெனில் இரு தரப்பினருமே தத்தம் ஒலிப்பு முறைதான் சரி என்பதற்கு அந்த அளவுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்.
 
எனவே இனி நாம், ஓர் ஆங்கிலச் சொல்லைத் தமிழ் ஒலிப்படுத்தி எழுதுவதாக இருந்தால் அதன் பக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள் அந்தச் சொல்லை ஆங்கிலத்திலும் ஒருமுறை எழுதி விடுவது இச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக இருக்குமென நம்புகிறேன். இதன்படி யாரும் அவரவர் ஒலிப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. அவரவர் ஒலிப்பு முறைப்படியே எழுதப்பட்டிருந்தாலும் அடைப்புக்குறிக்குள் அந்தந்த ஆங்கில வரிவடிவமும் இருப்பதால் யாருக்கும் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. இதனால் யாரும் அவரவர் ஒலிப்பு முறையை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்காது.
 
ஆனால் இந்த முறையிலும் ஒரே ஆங்கிலச் சொல்லை ஒவ்வொருவரும் அவரவர் ஒலிப்பு முறைப்படித்தானே எழுத வேண்டி வருகிறது? இஃது எப்படி பொதுத்தரமாகும் எனக் கேட்டால், 'இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்பது போல் எந்த வகையான பொதுத்தரத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்கு அல்லது பயனர் உளம் நோக ஒருதலைப்பட்சமாக ஒரு பொதுத்தரத்தைப் பின்பற்றுவதற்கு, இது மேல் இல்லையா? அது மட்டுமின்றி, நோபல் பரிசு பெற்றவர்கள் பற்றிப் பல குறுங்கட்டுரைகள் எழுத விரும்பிய திரு. கோபி அவர்கள் இந்த ஒருதலைப்பட்சமான பொதுத்தரம் பேணும் முறையால் அவற்றை எழுதும் எண்ணத்தையே கைவிட்டதாகக் கூறினாரே அஃது எவ்வளவு வேதனையான செய்தி!? அப்படியொரு முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்றால் அவர் உள்ளம் எந்த அளவுக்குப் புண்பட்டிருக்கும்?! நம் நண்பர்களுள் ஒருவர் அப்படி வேதனையடைய நாம் விடலாமா? அப்படி அவர் வேதனையடைந்த பின்னும் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுத்தர முறைக்கு மாறுவது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டாவா? அருள் கூர்ந்து சிந்தியுங்கள் கிளைஞர்களே!
 
நான் முன்வைத்துள்ள இந்த 'அடைப்புக்குறி முறை' பற்றிய உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள் நண்பர்களே!
 
அவற்றைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அன்பன்:
--[[பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்|இ.பு.ஞானப்பிரகாசன்]] 10:56, 1 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது