இ.பு.ஞானப்பிரகாசன்
= வரவேற்பு மடல்
தொகுவாருங்கள், இ.பு.ஞானப்பிரகாசன்! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 10:44, 2 மார்ச் 2010 (UTC)
கனகரத்தினம் சிறீதரன்
தொகுவணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை. நீங்கள் ஆங்கிலத் தலைப்பில் எழுதிய கட்டுரையை ஓரெழுத்தொருமொழி எனத் தலைப்பிட்டுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடு 11:37, 2 மார்ச் 2010 (UTC)
கனகரத்தினத்தின் பாராட்டு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைத் தெரிவு மிகவும் நன்று. தொடர்ந்து பங்களியுங்கள். ஏதேனும் உதவி தேவைப்படின் என்னிடமோ அல்லது வேறு பயனர்களிடமோ தயங்காமல் கேளுங்கள்.--Kanags \உரையாடு 23:32, 2 மார்ச் 2010 (UTC)
மணல்தொட்டி
தொகுவணக்கம், படிம இணைப்பு தொடர்பாக நற்கீரனிடம் சில கேள்விகள் கேட்டிருந்தீர்கள். நீங்கள் மணல்தொட்டியில் vadai.jpg என்ற படிமத்தை இணைக்க முயற்சித்தீர்கள். இந்தப் பெயரில் ஒரு படிமமும் விக்கியில் இல்லை. விக்கியில் உள்ள வடை படிமத்தின் பெயர்: Vadai.JPG. படிமத்தை இணைக்கும் போது upper case, lower case உட்பட சரியான spelling ஐக் கவனிக்கவும். இல்லையேல் இணைப்புத் தராது. பயனர் நற்கீரன் உங்கள் படிமங்களை அழித்ததாக மணல்தொட்டியின் வரலாற்றில் காட்டப்படவில்லை. அவர் உங்கள் எழுத்துக்களில் தலையிட்டதாகவும் தெரியவில்லை. மணல்தொட்டி உங்களைப் போன்றவர்கள் பயிற்சி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது. தவறாக எழுதினால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. மேலும் ஏற்கனவே விக்கியில் அல்லது விக்கி காமன்சில் உள்ள ஒரு படிமத்தை உங்கள் கட்டுரை ஒன்றில் இணைக்க விரும்பினால் நீங்கள் அக்கட்டுரையில் எழுத வேண்டிய முறை பின்வருமாறு: [[படிமம்:Farmer plowing.jpg|thumb|right|300px|படத்தைப் பற்றிய விபரம்]].--Kanags \உரையாடு 23:47, 27 மார்ச் 2010 (UTC)
வாழ்த்துகள்
தொகுஅன்பு நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களுக்கு,
உங்களை தமிழ் விக்கிக்கு வரவேற்பதில் பெரும் மகிழ் கொள்கிறேன். உங்களின் சுஜாதா கட்டுரை அருமை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். விரைவில் நம் ஊர் வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன்.
நன்றி
-- மகிழ்நன் 03:17, 29 மார்ச் 2010 (UTC)
- ஞானப்பிரகாசன் அவர்களே! வணக்கம்.விக்கிப்பீடியாவிற்கு வருக வருக. பாக்கெட் இணையம் மூலமாகப் பங்களிக்கபதாகக் கூறியுள்ளீர். அருமை. நீங்கள் செல்லுமிடமெல்லாம் விக்கிப்பீடியாவும் செல்லும் அல்லவா? சுஜாதா கட்டுரை நன்றாக வந்துள்ளது. மேலும் மேலும் பங்களிக்க வேண்டுகின்றேன். நன்றி.--பரிதிமதி 03:48, 29 மார்ச் 2010 (UTC)
நன்றி (ம) விளக்கம்
தொகுமதிப்பிற்குரிய நண்பர்கள் திரு.மகிழ்நனுக்கும் திரு.பரிதிமதிக்கும் நேச வணக்கம்!
தங்கள் மடல்கள் கண்டேன்.மகிழ்ந்தேன்! தங்கள் வரவேற்பிற்கு நன்றி!
ஆனால் சுஜாதா பற்றிய அக்கட்டுரை நான் எழுதியதில்லை.சுஜாதா பற்றி நேற்று விக்கிபீடியாவில் படித்த போது அக்கட்டுரையிலிருந்த சில பிழைகளைத் திருத்தினேன்.அவ்வளவுதான்!மற்றபடி அக்கட்டுரைக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை.
ஒருவேளை நான் திருத்தம் மேற்கொண்டதால் அக்கட்டுரை நான் எழுதியது போல் தோற்றமளிக்கிறதா அல்லது Beta வழியாகச் சென்று நான் அக்கட்டுரையைத் திருத்தியதால் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. ஒருவேளை நான்தான் அக்கட்டுரையை எழுதினேன் என்பது போல் தோற்றமளிக்கக் கூடிய வகையில் நான் அக்கட்டுரையில் ஏதேனும் செய்திருந்தால் தெரியாமல் செய்யப்பட்டிருக்கக் கூடிய அக்குற்றத்தை மன்னிக்கவும்!--இ.பு.ஞானப்பிரகாசன் 2:50pm, 2010 (UTC)
UTC விளக்கம்
தொகுவணக்கம் . தாங்கள் UTC பற்றி விளக்கம் கேட்டு இருந்ததை பார்த்தேன் . UTC Coordinated Universal Time (UTC) இது அவர்கள் உரையாடிய நேரம் எந்த நாட்டில் உள்ளது என்று அறிய . நீங்கள் இந்தியாவில் இருந்தால் IST என்று குறிப்பிடலாம் . --இராஜ்குமார் 2:11pm, 29 மார்ச் 2010 (ரியாத்) .
பேச்சுப் பக்கம்
தொகுவணக்கம், உங்கள் பேச்சுப் பக்கம் இன்னும் நிறையவே இல்லையே. அதற்குள் ஏன் தனியாகச் சேமிக்கப் பார்க்கிறீர்கள்? இன்னும் சில காலம் பொறுத்திருங்கள். அளவுக்கதிகமாக நீண்டிருந்தால் தனியாகச் சேமிக்கலாம். மேலும், கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புகள் தரும் போது அவற்றின் சரியான தலைப்புகளை [[ ]] என்றவாறு தரவேண்டும். உ+ம்: மணல்தொட்டிக்கு விக்கிப்பீடியா:மணல்தொட்டி என்றவாறு இருக்க வேண்டும். தனியே மணல்தொட்டி என்ற பெயரில் ஒரு பக்கமும் இல்லை.--Kanags \உரையாடு 11:34, 29 மார்ச் 2010 (UTC)
ஒரு விளக்கம்
தொகுமதிப்பிற்குரிய விக்கியக் கிளைஞர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
சுஜாதா என் உளம் கவர்ந்த எழுத்தாளர். ஆகவே அவரைப் பற்றி விக்கிபீடியாவில் நேற்று படித்துப் பார்த்தேன். படித்தபொழுது அக்கட்டுரையில் இருந்த சில சொற்பிழைகளைத் திருத்தினேன்.
உடனே இன்று காலை முதல் பலரும் சுஜாதா பற்றிய அந்தக் கட்டுரையை நான்தான் எழுதியிருப்பதாகத் தவறாக நினைத்துக் கொண்டு எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே இது தொடர்பாக விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன்.
நண்பர்களே! நான் அந்தக் கட்டுரையில் ஒரு சில சொற்களைத் திருத்த மட்டும்தான் செய்தேன். மற்றபடி எனக்கும் அந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ஒருவேளை நான் திருத்தம் மேற்கொண்டதால் அந்தக் கட்டுரை நான் எழுதியது போல் தோற்றமளிக்கிறதோ என்னவோ? அல்லது Beta வழியாகச் சென்று நான் அந்தக் கட்டுரையைத் திருத்தியதால் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை நான்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன் என்பதுபோல் தோற்றமளிக்கக் கூடிய வகையில்,அந்தக் கட்டுரையில் நான் ஏதாவது செய்திருந்தால் தெரியாமல் செய்த அக்குற்றத்தை அன்பு கூர்ந்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! வணக்கம்!!--இ.பு.ஞானப்பிரகாசன் 11:49pm, 29 மார்ச் 2010 (UTC)
ஓ!
தொகுஓ! அப்படியானால் சரி. நன்றி!--இ.பு.ஞானப்பிரகாசன் 9:56, 29 மார்ச் 2010 (IST)
வணக்கம்
தொகுஞானப்பிரகாசன், உங்களுடைய பயனர் பக்கத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். நீங்கள் அஞ்சல்தலை சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு ஆகியவற்றில் ஆர்வம் உண்டு எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். எனக்கும் இத்துறைகளில் ஆர்வம் உண்டு. இது தொடர்பான சில குறுங் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி அல்லது மொழிபெயர்த்துள்ளேன். அஞ்சல் தலை, அஞ்சல் தலை சேகரிப்பு, விடயம்சார் அஞ்சல்தலை சேகரிப்பு, நாணயவியல், நாணயச் சேகரிப்பு போன்ற கட்டுரைகளைப் பார்க்கவும். நீங்கள் முறையான சேகரிப்பில் ஈடுபட்டுள்ளீர்களா? எம்மாதிரியான அஞ்சல்தலைகள் நாணயங்களைச் சேகரிக்கிறீர்கள்? --- மயூரநாதன் 04:54, 5 ஜூன் 2010 (UTC)
மீன் பற்றி
தொகுமதிப்பிற்குரிய நண்பரே!
அன்பு வணக்கம்! நக்கீரனாரின் பேச்சுப் பக்கத்தில் நான் இட்டிருந்த மடலுக்கு நீங்கள் தெரிவித்திருந்த பதிலைக் கண்டேன். நீங்கள் கூறுவது முற்றும் உண்மையே. ஒரே சொல் வடமொழியிலும் தமிழிலும் இருந்தாலே அதை வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்த சொல் எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால் அது தவறு. தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்குப் போயிருக்கின்றன. இதைப் பற்றி ஒரு பழமொழி கூட உண்டு. 'தமிழுக்கு முகம் இல்லை சமசுகிருதத்துக்கு வாய் இல்லை' என்று. அதாவது தமிழில் முகத்தைக் குறிப்பதற்கென்று தனிச் சொல் எதுவும் கிடையாது, முகம் என்னும் சொல் உட்பட முகத்தைக் குறிப்பதற்குத் தமிழில் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுமே வடமொழிச் சொற்கள்தாம் என்பதும் இதே போல் வடமொழியில் வாயைக் குறிப்பதற்கென்று தனிச் சொல் எதுவும் கிடையாது, வாயைக் குறிப்பதற்கு வடமொழியில் பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களுமே தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் இதன் பொருள். அவ்வளவு ஏன், கோயில் கட்டுவதற்கான விதிமுறைகளைக் கூறும் 'ஆகம சாஸ்திர'மே தமிழிலிருந்து வடமொழிக்குப் போனதுதான் என்கிறார் தமிழ்ப் பேரறிஞர். சத்தியவேல் முருகனார் அவர்கள்.
ஆனால் 'மீன்' என்பது தமிழிலிருந்து வடமொழிக்குப் போன சொல் என்றா கூறுகிறீர்கள்? நான் கேள்விப்பட்ட வரை தமிழிலிருந்து வடமொழிக்குப் போனவையா வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தவையா என இதுவரை எந்தத் தமிழறிஞராலும் கண்டுபிடிக்க முடியாத சொற்கள் நீரும் மீனும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். பேரறிஞர். கால்டுவெல் தனது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற புகழ்பெற்ற நூலில் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதில் வியப்பு என்னவெனில் மேற்கண்ட எனது இதே நீர், மீன் பற்றிய கருத்தை எடுத்துக்காட்டாகவும் முதன்மையானதொரு வாதமாகவும் முன்வைத்து விக்கிப்பீடியா_ பொதுவான குறைகள் பகுதியில் ஒரு மடலை இன்றோ நாளையோ எழுதவுள்ளேன். ஆனால் நீங்கள் இதே விஷயம் தொடர்பாக ஏற்கனவே ஒரு கருத்தை, அதுவும் எனக்கான மடலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்! வியப்பாக இருக்கிறது இல்லையா?--இ.பு.ஞானப்பிரகாசன் 12:34, 30 ஜூன் 2010 (UTC)
- மீனும் நீரும் திராவிட மொழிச்சொற்கள் என்பது ஐயம் திரிபற நிறுவப்பட்டுள்ளது. எப்படியெனில் இவ்விரண்டு சொற்களுக்கும் மலைவாழ் பழங்குடியினர் பேசும் திராவிட மொழிகள் உட்பட அனைத்திலும் உள்ளன. தவிர இவற்றின் எண்ணற்ற கிளைச்சொற்களும் இம்மொழிகளில் உள்ளன. மேலும் இவை சுட்டும் பொருட்களுக்கு இவைதான் இம்மொழிகளில் முதன்மைச் சொற்கள். இந்த அடிப்படையிலும் வேறு சான்றுகளையும் கொண்டு இவ்வுண்மை நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் கூட ஆசுக்கோ பருப்போலோ இதை நினைவுகூர்ந்தார். பரோவின் திராவிட வேர்ச்சொல்லகராதியில் பாருங்கள். (மின்னுவதால் மீன்.) டர்னரின் வடமொழி வேர்ச்சொல்லகராதியிலும் இவ்வுண்மையைக் குறிப்பிட்டுள்ளார். -- சுந்தர் \பேச்சு 16:40, 30 ஜூன் 2010 (UTC)
நன்றி
தொகுபிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஞானப்பிரகாசன். --Kanags \உரையாடுக 11:39, 31 ஜூலை 2010 (UTC)
உதவி!!
தொகுஉங்களிடம் இருந்து ஒரு சிறு உதவி எதிர் பார்க்கிறேன்!!! விழுப்புரம் மாவட்டத்திற்கான வார்ப்புருவில் இருந்த Block என்ற சொல்லை நீக்கிவிட்டு ஊராட்சி ஒன்றியம் என்று மாற்றினேன். அது மட்டும் அல்லது ஆங்கில Villupuram District ல் உள்ள Block பகுதியை அதற்கான விளக்க பக்கத்துடன் இணைத்தேன். ஆனால் தமிழில் ஊராட்சி ஒன்றியத்திதிற்கான (Block) பக்கம் இன்னும் உருவக்க படவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள விளக்கதினை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு யாரேனும் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 05:50, 31 ஜூலை 2010 (UTC)
கருத்து
தொகுவணக்கம். உங்கள் அனைத்து உரையாடல்களும் படித்து இருக்குறேன். உங்களது ஆர்வமும் ஈடுபாடும் அருமை. உரையாடும் பொழுது சுருக்கமாக ஆழமான பொருள் புதைந்தாக உரையாடுங்கள். அது உங்கள் திறனையும் சிந்தனையும் மேலும் வளர்க்கும். கூடவே அவ்வ பொது கட்டுரைகளும் எழுதுங்கள். நன்றி. --இராஜ்குமார் 08:52, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- வணக்கம், புதிய பயனர்களை வரவேற்பதற்கு {{subst:புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவை எழுதி, மறக்காமல் உங்கள் ஒப்பத்தையும் இடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:21, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
- நன்கு பங்களித்து வருகுறீர்கள். வாழ்த்துக்கள். மேலும் விக்கிக்கு சிறப்பை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். --இராஜ்குமார் 09:58, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
பிறந்த நாள் வாழ்த்துகள்
தொகுநண்பனின் வாழ்த்து. (காலதாமதத்திற்கு வருந்துகிறேன்) --சூர்ய பிரகாசு.ச.அ. 14:51, 5 மார்ச் 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் இ.பு.ஞானப்பிரகாசன்,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
பிறந்த நாள் வாழ்த்துகள்
தொகுஎன்றைக்கோ ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ வரும் என்னையும் நினைவில் கொண்டு தவறாமல் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம்த்தைச் சேர்ந்த என் அன்பு நண்பர்களே! திரு.மதனாஹரன் அவர்களே! உங்கள் அன்புக்கு உளமார்ந்த நன்றி!
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர் செல்வா அவர்களே! ஏற்கனவே ஒருமுறை உங்களிடம் நான் உரையாடியிருக்கிறேன்! எதைப் பற்றி என்று உறுதியாக நினைவில்லை. வரலாற்றைப் பார்த்தால் தெரியும். கண்டிப்பாகத் தொடர்ந்து பங்களிக்கிறேன்.--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 16:10, 4 மார்ச் 2012 (UTC)--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 16:10, 4 மார்ச் 2012 (UTC)
பேச்சு:கோவிந்த குமார்
தொகுபார்க்க: பேச்சு:கோவிந்த குமார். ஆலமரத்தடியில் தகவல் இடும்போது அதன் அடிப்பகுதியில் இடுவது வழமை. நன்றி--இரவி (பேச்சு) 16:14, 6 மார்ச் 2012 (UTC)
படிமம்:BalaKumaran.jpg தொடர்பான பிரச்சினை
தொகுஇந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2012 மே 17 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.
- படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
- படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
- படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.
நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.shanmugam (பேச்சு) 18:23, 17 மே 2012 (UTC)
பிறந்த நாள் வாழ்த்துகள்
தொகுவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
பொறுத்தருள வேண்டும் நீச்சல்காரன் அவர்களே! இப்பொழுதுதான் உங்கள் அழைப்பையே பார்த்தேன். முன்பே பார்த்திருந்தாலும் இப்படிப்பட்ட கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு நிறைய கட்டுரைகளை உடனுக்குடன் எழுத எனக்குத் தெரியாது என்பதால் நான் கலந்து கொண்டிருக்க முடியாதுதான். எனினும் என்னையும் நினைவில் வைத்து அழைத்த உங்கள் அன்பினுக்கு நனி நன்றி!