உருத்திராட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிமாற்றல்: pl:Mala wąskolistna; cosmetic changes
வரிசை 19:
இந்த உருத்திராக்கம் பல நூற்றாண்டுகளாக கீழ்த்திசைப் பண்பாட்டினராகிய [[சீனர்]]கள், [[பௌத்தம்|பௌத்தர்கள்]], தாவோ, ஜப்பானியர்கள், சென் மதத்தோர், கொரியர்கள், இந்தியர்கள் ஆகியோரிடையே பரவலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கீழ்த்திசைப் பண்பாட்டின் இன்றியமையாப் பண்பான கூர்ந்த நோக்குத் தியானத்திற்கு உகந்ததாகக் கொள்ளப்படும் அமைதி, சாந்தம் ஆகியவற்றை, இந்த மணிகளை இதயத்தைச் சுற்றி அணிவதால் பெற முடிகின்றது எனக் கண்டு கொள்ளப்பட்டது.
 
== உருத்திராக்கம் சமய நம்பிக்கை ==
[[படிமம்:groupofrudraksha.jpg|thumb|૩૦૦px|[[உருத்திராட்சம்]]]]
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் [[சிவன்|சிவனின்]] ''கண்களைக்'' குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என [[சிவபுராணம்]] கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. இமயத்திலும் ஏனைய காடுகளிலும் அலைந்து திரியும் ஞானிகளும் ரிஷிகளும் உருத்திராக்கங்களையும் அவற்றினால் செய்யப்பட்ட மாலைகளையும் அணிந்து, நோயற்ற, அச்சமற்ற, முழுமையான வாழ்க்கையை வாழந்துள்ளார்கள்.
வரிசை 25:
"அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown) என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள் முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டு வருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்த பின் உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) எனப் பெயர் மாறியதுமான காய்மணி இது. (Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customarily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times)
 
== உருத்திராக்கம் குறித்த சில பாடல் கருத்துக்கள் ==
:"தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" - திருப்புகழ் 475
 
வரிசை 37:
* விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.
 
== வேறு பெயர்கள் ==
கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறு பெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.
 
வரிசை 49:
மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.
 
== தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி ==
விண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம்.
இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லைப் பெருமாள் கோயிலுக்குப் பயன் படுத்துவதைப் பார்க்கிறோம்.
வரிசை 67:
சைவருக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்; மற்றவை திருநீறும்; திருவைதெழுத்தும்."
 
== உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் ==
சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும் போது "நெற்றியில் பட்டை", "காவிச் சட்டை", "கழுத்தில் கொட்டை" என்று வேடிக்கையாகவும், சில சமயங்களில் வினையாகவும் சொல்வதுண்டு. இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உருத்திராக்கம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது.
வரிசை 76:
38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
 
=== ஒரு முகம் ===
:மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர்.
வரிசை 82:
ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.
 
=== இரண்டு முகம் ===
:மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.
 
=== மூன்று முகம் ===
:மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
 
=== நான்கு முகம் ===
:மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
 
இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.
 
=== ஐந்து முகம் ===
:மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
 
ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.
 
=== ஆறு முகம் ===
:மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
 
இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.
 
=== ஏழு முகம் ===
:மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.
 
=== எட்டு முகம் ===
:மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.
 
=== ஒன்பது முகம் ===
:மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
 
இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.
 
=== பத்து முகம் ===
:மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.
 
=== பதினோரு முகம் ===
:மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.
 
=== பன்னிரண்டு முகம் ===
:மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.
 
=== பதின்மூன்று முகம் ===
:மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
 
இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.
 
=== பதினான்கு முகம் ===
:மந்திரம் - ஓம் நமஹ சிவாய
 
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
 
=== பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் ===
பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
 
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
 
=== கௌரி சங்கர் ===
:மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ
 
வரிசை 151:
உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.
 
== மந்திரமும் எண்ணும் ==
 
:"ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,
வரிசை 163:
:இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]
 
== மணி அளவு ==
பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
 
வரிசை 177:
:பாசவிதம் பாற்ற நினைப் பார். "
 
== செபமாலைக்குரிய மணிகள் ==
இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.
 
வரிசை 187:
:மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.
 
== செபத்துக்குரிய விரல் ==
அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் .
[அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.]
 
== செபிக்கும் ஒலி ==
செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.
 
வரிசை 209:
செபமாலை அறுந்து வீழின், குறைவற முன்போல் கோவையாக்கி, முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க வேண்டும்.
 
== பொது ==
சிவபக்தருக்குக் உருத்திராக்க தானம் செய்வது சிறப்புடையது. உருத்திராக்கம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம். மேற்கண்டபவைகளைக் கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி அருளிய 'உருத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.( திருவாடுவடுதுறை ஆதீனம் 1954- வெளியீடு.)
 
வரிசை 218:
இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.
 
== உருத்திராக்கம் பற்றிய அறிவியல் முடிவுகள் ==
ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
 
வரிசை 242:
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.
 
== உருத்திராக்க மணிகள் குறித்த சில கேள்விகளும் பதில்களும் ==
 
* உருத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?
வரிசை 286:
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால், இவற்றை ஒருவரின் வாழ்விறுதிக்குப் பின்பு மற்றவர் பயன்படுத்தலாம்.
 
== உசாத்துணை ==
* [http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam36.htm முத்துக்கமலம் இணைய இதழில் சிங்கப்பூர் கிருஷ்ணன் எழுதிய "உருத்திராட்சம் தெரிந்து கொள்வோம் கட்டுரை]
 
வரிசை 304:
[[ne:रुद्राक्ष]]
[[no:Rudraksha]]
[[pl:RudrakszaMala wąskolistna]]
[[pt:Elaeocarpus ganitrus]]
[[ru:Рудракша]]
"https://ta.wikipedia.org/wiki/உருத்திராட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது