ஞானம் (சைவ சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஞானம்''' சைவ நாற்பாதங்களில் நாலாவது படிய...
 
No edit summary
வரிசை 1:
'''ஞானம்''' [[சைவ நாற்பாதங்கள்|சைவ நாற்பாதங்களில்]] நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
 
 
மாணிக்கவாசகர், மெய்கண்ட தேவர் ஆகியோருக்கு குரு உபதேசம் கிடைத்தமையும், அருணகிரிநாதருக்கு முருகனே குருவாய் வந்து உபதேசம் செய்தமையும் ஞானநெறியின் சான்றுகளாகும். இந்நெறியில் நிற்பதன் மூலம் சாயுச்சிய முத்தியும் சிவமேயாகி ஒன்றுதலாகிய பாக்கியமும் கிட்டும். சிவமோடு ஒன்றியதனால் சன்மார்க்கமாகிறது. இச்சன்மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
 
: தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய
: பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
: குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
: தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.
 
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]]
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]]
[[பகுப்பு:சைவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஞானம்_(சைவ_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது