தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
==அரசியல் நிலவரம்==
1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 இல்அக்டோபர் மாதம் [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] படு கொலைபடுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நிலை குன்றியிருந்த [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம்ஜியாருக்கு]] ஆதாரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன. 1983 இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|மேலவை]] உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் [[மு. கருணாநிதி]] இத்தேர்தலில் போட்டியிட வில்லை. திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தன. எம்ஜியார் [[அமெரிக்கா|அமெரிக்காவில்]] மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான [[இராம. வீரப்பன்]] திட்டமிட்டு நடத்தினார். அதிமுக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எம்ஜியார் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் காட்சிகள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் திரையிடப்படடன. இத்தேர்தலின் போதே ”எம்.ஜி.ஆர் ஃபார்முலா” என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிக்கு (காங்கிரசு) 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு (அதிமுக) 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.<ref name="Palanithurai"/><ref name="Mohandas"/>
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1984" இலிருந்து மீள்விக்கப்பட்டது