ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
யூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனிய [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.
 
[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை யூரோ பிரதேசத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் வீழ்ச்சிநெருக்கடி]] பல நாடுகளை யூரோ பிரதேசத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் யூரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை செரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி யூரோ பிரதேச நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட [[ஐசுலாந்து|ஐஸ்லாந்து]] மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.
 
==நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ_வலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது