பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உஇ
வரிசை 37:
1944ன் இறுதியில் [[மேற்கு ஐரோப்பா]]வின் பெரும் பகுதிகளை நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துவிட்டன. அடுத்து ஜெர்மனியின் பிரதேசங்களைத் தாக்கும் முயற்சி தொடங்கியது. [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையிலும்]] [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த [[ஹிட்லர்]] மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்கு போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.
 
[[ஆர்டென் காடு|ஆர்டென்]] பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, [[ஆண்ட்வெர்ப்]] துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]களை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இல்க்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய [[மேல்நிலை உத்தி]]யாளர்களின் கணிப்பு. இதற்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 16ல் தொடங்கிய தாக்குதல் மேற்கத்தியப் படைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேசநாட்டு உளவுத்துறைகள் இப்படி ஒரு தாக்குதல் நிகழும் என்று எச்சரித்திருந்தாலும், தளபதிகள் அதனைப் பொருட்படுத்தாம்லிருந்தனர். பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்த்தால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் [[வான் ஆளுமை|பலத்தை]] ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான [[பாஸ்டோன்]] நகரை அவைகளால் [[பாஸ்டோன் முற்றுகை|கைப்பற்ற முடியவில்லை]]. அவசரமாக போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேறம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின.
 
மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சியபடைபிரிவுகள் [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டிற்குப்]] பின் வாங்கின. அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையாக அமைந்தது. “பல்ஜ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வீக்கம் என்று பொருள். வரைபடங்களில் நேச நாட்டு படைநிலைகளின் ஊடாக ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் ஒரு வீக்கம் போல காட்சியளித்ததால், மேற்கத்திய ஊடகங்கள் இதனை பல்ஜ் சண்டை என்று அழைக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது.
வரிசை 58:
 
[[File:German soldier Ardennes 1944.jpeg|right|thumb|200px|ஜெர்மானிய எந்திரத் துப்பாக்கி வீரர்]]
டிசம்பர் 16, காலை 5.30 மணியளவில் பெரும் பீரங்கித் தாக்குதலுடன் பல்ஜ் சண்டை ஆரம்பமாகியது. களத்தின் வடபகுதியில் ஜெனரல் செப்ப் டைட்ரிக் தலைமையிலான 6வது [[எஸ். எஸ்]] பான்சர் (கவச) ஆர்மி [[லீஜ்]] நகரை நோக்கி முன்னேறத்தொடங்கியது. மத்தியில் வான் மாண்ட்டூஃபலின் தலைமையிலான 5வது பான்சர் ஆர்மி [[பாஸ்டோன்]] நகரை நோக்கியும் தெற்கில் எரிக் பிராண்டன்பெர்கரின் 7வது ஆர்மி [[லக்சம்பர்க்|லம்சம்பர்கை]] நோக்கியும் முன்னேறத் தொடங்கின. ஆரம்பத்தில் கடுமையான வானிலையும், அமெரிக்கபப்டைகளில் நிலவிய குழப்பமும் ஜெர்மானியருக்கு சாதகமாக அமைந்தன. இரு நாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அமெரிக்க எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட நேச்நாட்டு தளபதிகள் பல்ஜ் போர்முனைக்கு புதிய இருப்புப் படைபிரிவுகளை அனுப்பத்தொடங்கினர். வடக்கில் டைட்ரிக்கின் படைகள் விரைவில் முடக்கப்பட்டன. மத்தியப் பகுதியில் மாண்டூஃபலின் படைகள் டிசம்பர் 21ல் [[சென் வித் சண்டை|சென். வித் நகரைக் கைப்பற்றின]]. அதே நாள் பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டன. பெல்ஜியத்தின் மேற்குப்பகுதிக்குச் செல்லும் சாலைகளின் சங்கமத்தில் பாஸ்டோன் இருந்ததால், பல்ஜ் தாக்குதலின் வெற்றிக்கு அதனைக் கைப்பற்றுவது மிக அவசியமாக இருந்தது. ஆனால் பாஸ்டோன் நகரில் இருந்த அமெரிக்க 101வது வான்குடை டிவிசனின் படைவீரர்கள் நகரம் ஜெர்மானியர் வசமாகாமல் காபாற்றிவிட்டனர். வடக்கிலும் மத்தியிலும் போலல்லாமல் தெற்கு களத்தில் ஜெர்மானியப்படைகள் சிறு தூரம் மட்டுமே முன்னேற முடிந்தது. இக்காலகட்டத்தில் முன்னேறிய ஜெர்மானியப் படைகள் மால்மெடி என்னும் இடத்தில் சரண்டைந்த அமெரிக்கப் போர்க்கைதிகளை [[மால்மெடி படுகொலை|படுகொலை செய்தன]].
 
[[File:DeadBelgiumcivilians1944.jpg|thumb|left|250px|[[எஸ். எஸ்]] படையினரால் கொல்லப்பட்ட பெல்ஜியப் பொதுமக்கள்]]
டிசம்பர் 23ம் தேதி நேசநாட்டு எதிர்த்தாக்குதல் ஆரம்பமாகியது. வானிலை சீராகத்தொடங்கியதால், தரையில் முடங்கியிருந்த நேசநாட்டு வான்படைகள் ஜெர்மானியப் படைகளைத் தாக்கத் தொடங்கின. டிசம்பர் 24ம் தேதி ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் அறவே தடைபட்டது. திட்டமிட்டபடி மியூசே ஆற்றை அவைகளால் அடையமுடியவில்லை. ஜனவரி 1ம் தேதி இழந்த வேகத்தை மீண்டும் பெற ஜெர்மானியப் படைகள் மீண்டுமொரு ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃவே]] பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து நாடுகளிலுள்ள நேசநாட்டு வான்படைத் தளங்களைத் [[போடன்பிளாட் நடவடிக்கை|தாக்கியது]]. தரைப்படைகளும், புதிய தாக்குதலின் மூலம் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் இத்தாக்குதல்கள் நேசநாட்டுப் படைகளால் [[நார்ட்வின்ட் நடவடிக்கை|முறியடிக்கப்பட்டன]]. அடுத்த சில வாரங்களில் ஜெர்மானியர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் நேசநாட்டுப்படைகளால் மீட்கப்பட்டன.
 
==தாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது