விடுதலைப் பயணம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ml:പുറപ്പാട്
சி விடுதலைப் பயணம் - யாத்திராகமம் இணைத்தல்
வரிசை 4:
== நூல் பெயர் ==
 
ஒடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் [[எகிப்து]] நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை '''விடுதலைப் பயணம்''' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.
 
இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sh'moth" அதாவது "பெயர்கள்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "exodos" (ἔξοδος, = புறப்படுகை) என்பதாகும்.
வரிசை 13:
 
இசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.
 
== நூலின் மையக் கருத்துகள் ==
 
'''விடுதலைப் பயணம்''' நூலில் 40 அதிகாரங்கள் உள்ளன. இந்த நூலைக் கீழ்வரும் பல பகுதிகளாகப் பிரித்து அவற்றில் அடங்கியுள்ள கருத்துக்களை வரிசைப்படுத்தலாம்:
# [[தொடக்க நூல்|தொடக்க நூலில்]] கூறப்பட்ட வரலாறு விடுதலை பயணத்தில் தொடர்கிறது. யோசேப்பும் அவர்தம் சகோதரர்களும் தம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் எகிப்துக்குச் செல்கின்றனர். அங்கே குடியேறுகின்றனர். தொடர்ந்து, [[இசுரயேலர்]] [[எகிப்து|எகிப்தில்]] பலுகிப்பெருகி, பெருந்திரளான மக்களாக வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் எகிப்தியரின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்து கடின வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் (விப 1).
#லேவி குலத்தைச் சார்ந்த குடும்பம் ஒன்றில் ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது. எபிரேய ஆண்குழந்தைகளை வாழவிடக்கூடாது என்று அரச கட்டளை இருந்த போதிலும் குழந்தையின் தாய் கோரைப்புல்லால் ஒரு பேழை செய்து அதை நைல்நதிக் கரையில் நாணல்களுக்கிடையில் விட்டுவைக்கிறாள். எகிப்து அசனாகிய பார்வோனின் மகள் ஆற்றில் அக்குழந்தையைக் கண்டெடுத்து அதற்கு "மோசே" என்று பெயரிட்டு அவனைத் தன் மகனாக வளர்க்கிறாள். மோசே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கடளிடமிருந்து ஓர் அழைப்புப் பெறுகிறார். "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்...அவர்களின் தயரங்களை நான் அறிவேன்...இசுரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காகப் பார்வோனிடம் உன்னை அனுப்புகிறேன்" என்று அறிவிக்கிறார் (விப 2-3).
#இசுரயேல் மக்களை விடுவிக்க வேண்டும் என்று மோசே பார்வோனிடம் வேண்டுகிறார். ஆனால் அரசன் மறுக்கிறான். கடவுளின் வல்லமையால் மோசேயும் அவர் சகோதரன் ஆரோனும் அதிசய செயல்கள் பல செய்கிறார்கள். ஆனாலும் பார்வோன் மக்களை விடுதலை செய்ய இணங்கவில்லை (விப 4-11).
#விடுதலை விழாவாகிய பாஸ்கா எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பது விவரிக்கப்படுகிறது. மக்களின் விடுதலைப் பயணம் தொடங்குகிறது (விப 12).
#மக்கள் பாலைநிலத்தைக் கடந்து செல்லும்போது பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத்தூணும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன (விப 13)
#இசுரயேலரைத் துரத்திவருகின்ற எகிப்தியரின் கைகளிலிருந்து அவர்களைக் கடவுள் காக்கின்றார். வழியில் செங்கடல் திறந்து இசுரயேலருக்கு வழிவிடுகிறது, ஆனால் எகிப்தியர் அக்கடலைக் கடக்க முயன்றபோது நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளவே, அவர்கள் மூழ்கிச் சாகின்றனர். மோசே இறைவனின் வல்லமையை வாழ்த்தி வெற்றிப் பாடல் பாடுகின்றார்; மோசேயின் சகோதரி மிரியாம் வெற்றிப் பாடல் இசைக்கின்றார் (விப 14-15).
#தங்களுக்குப் போதிய உணவு பாலைநிலத்தில் கிடைக்கவில்லை என்று மக்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுக்கின்றனர். கடவுள் அதிசயமாக வானிலிருந்து அப்பம் வழங்குகின்றார். மக்கள் அதைக் கண்டு வியந்து அதை "மன்னா" என்று அழைக்கின்றனர். மாலையில் காடைகள் அவர்களுக்கு உணவாகத் தரப்படுகின்றன; பாறையிலிருந்து நீர் புறப்பட்டு மக்களின் தாகத்தைத் தணிக்கிறது (விப 16-17).
#மோசே மக்களை தொடர்ந்து வழிநடத்துகிறார். நீதிபதிகளை நியமிக்கிறார். சீனாய் மலையில் ஏறிச் சென்று கடவுளின் கைகளிலிருந்து கட்டளைகளைப் பெற்று அவற்றை மக்களுக்கு அளிக்கிறார் (விப 18-20).
#மோசே மக்களுக்குக் கடவுள் பெயரால் அளித்த சட்டங்கள் (விப 21-23).
#ஆண்டவர் அளித்த சட்டங்களைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதாக மக்கள் வாக்களிக்கின்றனர். கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார் (விப 24)
#வழிபாடு பற்றி மோசேக்கு வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 25-27).
#குருக்களின் உடை பற்றியும் நடத்தை பற்றியும் வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 29-30).
#வாரத்தின் ஏழாம் நாளை ஓய்வு நாளாகக் கடைப்பிடித்தல் பற்றிய சட்டங்கள் (விப 31).
#மக்கள் தங்கள் கடவுளாகிய யாவேயை மறந்து, பொன்னால் கன்றின் உருவம் செய்து அதை வழிபடுகின்றார்கள்; இதைக் கண்டு கோபமுற்ற மோசே தம் கையில் தாங்கியிருந்த உடன்படிக்கைப் பலகைகளைக் கீழே போட்டு உடைக்கிறார். மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள் (விப 32).
#கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார் (விப 32-34).
#உடன்படிக்கைப் பேழை செய்யப்படுகிறது. சந்திப்புக் கூடாரம் எழுப்பப்படுகிறது. குருக்களுக்கான உடைகள் பற்றிய சட்டங்கள் வழங்கப்படுகின்றன் (விப 35-40).
 
== விடுதலைப் பயணம் ==
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைப்_பயணம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது