சாலஞ்சர் விண்ணோட விபத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==விபத்து==
[[சாலஞ்சர் விண்ணோடம்]] தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மத்திய [[புளோரிடா]] வின் கடற்கரையோரமாக காலை 11:39 மணியளவில் கலம் சிதறி விழுந்தது. விண்ணோடத்தின் வலது திட விண்கல உயர்தியில் இருந்த ஓ-வளையம் விண்கலம் மேலெம்புகையில் செயலற்றுப்போனதும் கலம் பிளவுபடத் தொடங்கியது. ஓ-வளைய செயலிழப்பால் கலத்தின் திட விண்கல உயர்தியில் பிளவு ஏற்பட்டு அழுத்தமூட்டப்பட்ட வெப்ப வாயுக்கள் திட விண்கல விசைப்பொறியினூடகப் பரவி கலத்தின் எரிபொருள் தொட்டியிலும், திட உயர்தியின் பக்கங்களிலும் மோதுகையை உருவக்கியது.இதனால் வலது பக்க திட உயர்த்தியின் பின்பக்க இணைப்பு பிரிந்து வெளிப்புர தொட்டியின் அமைப்பில் முறிவை ஏற்படடுத்தியது. காற்றியக்கம் சார்ந்த விசைகள் அதன் சுற்றுப்பாதை நிறுத்தியை உடைத்தது.
[[File:Challenger - STS-51-L Explosion.ogg|thumb|சாலஞ்சர் விபத்து நிகழ்படம்]]
குழுவினர் தங்கும் தொகுதி மற்றும் கலத்தின் மற்ற பகுதிகள் கடலுக்கடியில் நீண்ட தேடலுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டன.விண்ணோடம் முதலில் பிளவுபடத் தொடங்கியபோது உள்ளிருந்த குழுவினர்கள் உயிருடன் இருந்ததாக அறியப்படுகிறது.குழுவினர் இறந்த துல்லியமான நேரம் தெரியாவிட்டலும் விண்ணோடத்தில் அவசரத்தில் தப்பித்துக்கொள்ளும் வசதி அமைப்புகள் இல்லாததால் விண்கலம் கடலில் மோதுகையில் குழுவினர் பிழைத்துக்கொள்ள வழியின்றிபோனது. விண்ணோடம் செலுத்தப்படுவதை பலர் நேரடியாகப் பார்த்தனர். கிரிஸ்டா மெக் அஃபி என்ற ஆசிரியரும் விண்வெளிக்குழுவில் இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாலஞ்சர்_விண்ணோட_விபத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது