குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குமரி விடுதலைப் போராட்டம்''' என்பது [[தமிழ்]] பேசும் குமரி மக்கள் [[கேரளா]]விலிருந்துதிருவிதாங்கூரிலிருந்து [[கன்னியாகுமரி மாவட்டம்|குமரி மாவட்டத்தை]] தமிழ் நாட்டுடன் இணைக்க 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறது. இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் [[தமிழ் நாடு|தமிழகத்துடன்]] இணைந்தது.
 
==வரலாறு==
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான [[திருவிதாங்கூர்]] இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இனைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-[[கொச்சி]] <ref>http://www.hampi.in/kollam.shtml</ref>மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரைத்திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்கள் மலையாள திருவிதாங்கூர்அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தாய் தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைந்தது. திரு மார்சல் ஏ. நேசமணி அவர்கள் இப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதால் மக்கள் அவரை குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கின்றனர். மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தாய் தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.
==போராட்ட தலைவர்கள்==
 
*மார்ஷல் [[ஏ. நேசமணி]]
*அப்துல் ரசாக்
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது