மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 74:
===மார்க்கெட் கார்டன்===
{{main|மார்க்கெட் கார்டன் நடவடிக்கை}}
 
ஜூன்-செப்டமபர் 1944, காலகட்டத்தில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்சு பெரும்பாலும் மீட்கப்பட்டுவிட்டது. ஜெர்மானியப் படைகள் அருகிலுள்ள [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]] ஆகிய நாடுகளுக்கு பின்வாங்கி விட்டன. அடுத்ததாக ஜெர்மனியைத் தாக்க உத்திகள் ஆராயப்பட்டன. ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லைப்பகுதியை ஜெர்மானியப் படையினர் மிகவும் பலப்படுத்தியிருந்தனர். [[சிக்ஃப்ரைட் கோடு]] என்றழைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அரணை நேரடியாகத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்திருந்தனர். இதனால் மார்க்கெட் கார்டன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம், மேற்குத் திசையில் சுற்றி சிக்ஃபிரைட் கோட்டைத் தவிர்த்து [[நெதர்லாந்து]] நாட்டின் வழியாக ஜெர்மனியை நேரடியாகத் தாக்குவதே. இதற்கு [[ரைன் ஆறு|ரைன்]] மற்றும் [[மியூஸ் ஆறு|மியூஸ்]] ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற வேண்டும். பாலங்களைக் கைப்பற்றி விட்டால், பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ஜெர்மனியின் மையத் தொழில்பகுதியான [[ரூர்]] பிரதேசத்தைத் தாக்க படைகளை நகர்த்தலாம் என்பது திட்டம். இத்திட்டம் வெற்றிபெற இதற்கு [[ரைன் ஆறு|ரைன்]] மற்றும் [[மியூஸ் ஆறு|மியூஸ்]] ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற நேசநாட்டுப் படைகள் முயன்றன.
 
மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் இரு பெரும் உட்பிரிவுகள் இருந்தன. ”மார்க்கெட் நடவடிக்கை”யின் நோக்கம் வான்குடை வீரர்களைக் கொண்டு ஜெர்மனி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாலங்களைக் கைப்பற்றுவது. “கார்டன் நடவடிக்கை”யின் நோக்கம் கவசப் படைகளைக் கொண்டு ஜெர்மனி பாதுகாப்பு கோட்டை உடைத்து வான்குடை வீரர்கள் கைப்பற்றியிள்ள பாலங்களைச் சென்றடைவது. இத்தாக்குதல் செப்டம்பர் 17-25 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. தாக்குதல் பகுதியில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய [[எஸ். எஸ்]] படைப்பிரிவுகள், பாலங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தாமதம், ஜெர்மானிய எதிர்தாக்குதல் போன்ற காரணங்களால் மார்க்கெட் கார்டன் வெற்றி பெறவில்லை. கைப்பற்ற வேண்டிய நான்கு முக்கிய பாலங்களில் மூன்றினை நேச நாட்டு [[வான்குடை]] வீரர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் நானகாவது [[ஆர்னெம் சண்டை|ஆர்னெம்]] பாலத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முயன்ற பிரிட்டானிய 1வது வான்குடை [[டிவிசன்]] ஜெர்மானிய எதிர்த்தாக்குதலால் அழிக்கப்பட்டு விட்டது. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் சிக்ஃபிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவது தவிர்க்க முடியாமல் போனது.
 
===பாரிசிலிருந்து ரைன் வரை===
{{main|பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்}}