மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 122:
==1945: போரின் முடிவு==
{{main|ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு}}
[[File:Bundesarchiv Bild 183-R77799, Berlin - Karlshorst, die deutsche Kapitulation.jpg|right|thumb|250px| [[பெர்லின்]] நகரில் சரணடைவு ஒப்பந்ததில் கையெழுத்திடுகிறார் ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]]]]
ஏப்ரல் 30ல் [[பெர்லின் முற்றுகை|முற்றுகையிடப்பட்ட]] [[பெர்லின்]] நகரில் ஹிட்லர் தனது [[பியூரர் பதுங்கு அறை|பதுங்கு அறையில்]] தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் குறிப்பிட்டபடி அட்மைரல் [[கார்ல் டோனிட்ஸ்]] ஜெர்மனியின் புதிய தலைவரானார். மெ முதல் வாரத்தில் நாசி ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்த படைப்பிரிவுகள் சரணடைந்தன.
 
மே 6ம் தேதி மேற்கத்திய நேச நாடுகளிடம் சரணடைவுப் பேச்சு வார்த்தைகளை நடத்த டோனிட்ஸ் ஜெனரல் [[ஆல்ஃபிரட் யோட்ல்|யோடிலை]] அனுப்பினார். [[யால்டா மாநாடு|யால்டா மாநாட்டில்]] ஜெர்மனி அனைத்து நேச நாடுகளிடமும் சமமாக சரணடைய வேண்டுமென்று சோவியத் யூனியனும் மேற்கத்திய நேச நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்த படி, மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி [[பிரான்சு|பிரான்சின்]] ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]] சோவியத் தளபதி மார்ஷல் [[கிரகோரி சூக்கோ]]வின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்துடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
 
==குறிப்புகள்==